ரோஹித், கோலி, ஸ்மித்லாம் இல்ல.. இந்தியாவின் “MR 360" தான் என்னோட ஃபேவரட் பேட்ஸ்மேன்.. லாரா அதிரடி

By karthikeyan VFirst Published Mar 10, 2020, 1:18 PM IST
Highlights

சர்வதேச கிரிக்கெட்டில் ஆல்டைம் பெஸ்ட் பேட்ஸ்மேன்களில் ஒருவரான லெஜண்ட் பிரயன் லாரா, சமகால கிரிக்கெட்டில் தனக்கு மிகவும் பிடித்த பேட்ஸ்மேன் யார் என்று கூறியுள்ளார். 
 

டான் பிராட்மேன், விவியன் ரிச்சர்ட்ஸ், கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், பிரயன் லாரா, பாண்டிங் ஆகியோரெல்லாம் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் தலைசிறந்த பேட்ஸ்மேன்களாக அறியப்படுபவர்கள். தங்களுக்கு என்று ஒரு தனித்த அடையாளத்துடன் முத்திரை பதித்தவர்கள்.

அப்பேர்ப்பட்ட சிறந்த வீரர்களில் ஒருவரான பிரயன் லாராவே, இந்திய அணியின் இளம் வீரரின் பேட்டிங்கால் கவரப்பட்டிருக்கிறார். லாரா, இந்தியாவில் நடந்துவரும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு டி20 தொடரில் வெஸ்ட் இண்டீஸ் லெஜண்ட்ஸ் அணியின் கேப்டனாக ஆடிவருகிறார். 

இந்நிலையில், ஸ்போர்ட்ஸ்டாருக்கு அவர் அளித்த பேட்டியில், தற்போதைய வீரர்களில் தனக்கு மிகவும் பிடித்த வீரர் யார் என்று தெரிவித்துள்ளார். மாடர்ன் டே கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஸ்மித் என பல சிறந்த பேட்ஸ்மேன்கள் உள்ளனர். ஆனால் எனக்கு பிடித்தது கேஎல் ராகுல் தான் என லாரா தெரிவித்துள்ளார். 

கேஎல் ராகுல் ஃபார்மில் இல்லாதபோதே அவருக்கு ஆதரவாக பேசியிருந்த லாரா, தனக்கு ராகுலின் பேட்டிங் மிகவும் பிடித்திருப்பதாகவும், அவர் விராட் கோலிக்கு அடுத்து இந்திய கிரிக்கெட்டின் மிகப்பெரிய வீரர் அவர் தான் என்றும் நம்பிக்கை தெரிவித்திருந்தார். 

சர்வதேச கிரிக்கெட்டில் மிஸ்டர் 360 டிவில்லியர்ஸ். இந்திய கிரிக்கெட்டை பொறுத்தமட்டில் ராகுல் தான் மிஸ்டர் 360. பாரம்பரியான கவர் டிரைவ்களையும் சரி, புதுமையான, வித்தியாசமான, ரிஸ்க் எடுத்து ஆடும் ஷாட்டுகளையும் சரி, அசால்ட்டாக அடிக்கக்கூடியவர் ராகுல் என்பது குறிப்பிடத்தக்கது. 

Also Read - கிரிக்கெட் வரலாற்றில் அரிதினும் அரிதான சம்பவம்.. பிசிசிஐ-யின் திட்டமின்மையால் வதைபடும் அம்பயர்

டெஸ்ட் அணியில் தனது இடத்தை இழந்த ராகுல், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சமீபகாலமாக அருமையாக ஆடி ஃபார்முக்கு வந்துள்ளார். எனவே விரைவில் மீண்டும் டெஸ்ட் அணியில் ராகுல் இடம்பிடிப்பார் என்பதில் சந்தேகமில்லை. 
 

click me!