#WIvsSA 2வது டி20யில் தென்னாப்பிரிக்கா அபார வெற்றி..!

Published : Jun 28, 2021, 05:13 PM IST
#WIvsSA 2வது டி20யில் தென்னாப்பிரிக்கா அபார வெற்றி..!

சுருக்கம்

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் 16 ரன் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றது.  

தென்னாப்பிரிக்க அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. டெஸ்ட் தொடரை தென்னாப்பிரிக்க அணி வென்றது. இதையடுத்து 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடந்துவருகிறது.

முதல் டி20யில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்ற நிலையில், 2வது டி20 போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்க அணி 20 ஓவரில் 166 ரன்கள் அடித்தது. தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா அதிகபட்சமாக 46 ரன்கள் அடிக்க,  ரீஸா ஹென்ரிக்ஸ் 42 ரன்கள் அடித்தார்.

இதையடுத்து 167 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் தொடக்க வீரர் ஆண்ட்ரே ஃப்ளெட்சர்(35) மற்றும் பின்வரிசையில் ஃபேபியன் ஆலன்(34) ஆகிய இருவர் மட்டுமே ஓரளவிற்கு நன்றாக ஆடினர். மற்ற வீரர்கள் அனைவரும் சொதப்ப, வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் மட்டுமே அடித்தது. இதையடுத்து 16 ரன் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றது.

5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என சமனடைந்துள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

IND vs NZ 2nd T20: இந்திய அணியில் 2 மாற்றங்கள்.. இளம் வீரர் அதிரடி நீக்கம்.. பிளேயிங் லெவன்!
இந்தியாவில் விளையாட முடியாது.. வங்கதேசம் திட்டவட்டம்.. 'ஆப்பு' வைக்கும் ஐசிசி.. அதிரடி மூவ்!