நியூசிலாந்து சரியா செஞ்ச அந்த விஷயத்துல இந்திய அணி கோட்டை விட்டுருச்சு..! காம்ரான் அக்மல் அதிரடி

By karthikeyan VFirst Published Jun 28, 2021, 4:22 PM IST
Highlights

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்திய அணி சரியான ஆடும் லெவன் காம்பினேஷனுடன் களமிறங்கவில்லை என காம்ரான் அக்மல் தெரிவித்துள்ளார்.
 

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் நியூசிலாந்திடம் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. நியூசிலாந்து அணி அபாரமாக ஆடி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்றது. அந்த போட்டியில் கண்டிஷனுக்கு ஏற்ப இந்திய அணி ஆடும் லெவன் காம்பினேஷனை தேர்வு செய்யவில்லை என்ற விமர்சனம் தொடக்கம் முதலே இருந்தது.

சீம் & ஸ்விங் கண்டிஷனில் இந்திய அணி அஷ்வின் மற்றும் ஜடேஜா ஆகிய 2 ஸ்பின்னர்களுடன் ஆடியிருக்கக்கூடாது என்ற விமர்சனம் அணி தேர்வு செய்யப்பட்டதில் இருந்தே இருந்துவந்தது. அதேபோலவே 2வது ஸ்பின்னராக எடுக்கப்பட்ட ஜடேஜா, பெரிதாக பந்துவீசவும் இல்லை. ஆல்ரவுண்டராக எடுக்கப்பட்ட அவர் பேட்டிங்கும் சரியாக ஆடவில்லை. அதற்கு பதிலாக, கூடுதல் பேட்ஸ்மேனை எடுத்திருக்கலாம்.

ஸ்பின்னிற்கு ஒத்துழைப்பு இல்லாத கண்டிஷனில் 2 ஸ்பின்னர்கள் தேவையில்லை என்பதே பெரும்பாலானோரின் கருத்தாக இருந்தது. ஆனால் கேப்டன் கோலியோ இதுதான் எங்கள் அணியின் சிறந்த லெவன் என்று கூறிவிட்டார். ஆனால் இந்திய அணியின் அணி தேர்வு சரியானது இல்லை என்பது களத்தில் இந்திய அணி களத்தில் தடுமாறியபோது ஊர்ஜீதமானது.

இந்திய அணி அந்த போட்டியில் தோற்றுவிட்ட நிலையில், அதுகுறித்து பேசியுள்ள காம்ரான் அக்மல், டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் சீமிங் கண்டிஷனில் இந்திய அணி 2 ஸ்பின்னர்களுடன் ஆடியிருக்கக்கூடாது. நியூசிலாந்து அந்த கண்டிஷனுக்கு ஏற்ற சிறந்த ஆடும் லெவனை தேர்வு செய்திருந்தது. முதல் நாள் ஆட்டம் முழுவதுமாக மழையால் ரத்தானபொதிலும் நியூசிலாந்து அணி வென்றுவிட்டது. 

இந்திய அணி பேட்டிங்கை வலுப்படுத்தியிருக வேண்டும். இந்திய அணி அனைத்து விஷயங்களையும் ஆராய்ந்து அதற்கேற்ப ஆடும் லெவனை முடிவு செய்திருக்க வேண்டும். ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவில் ஆடியதை போலவே 2 ஸ்பின்னர்களுடன் ஆடியது இந்திய அணி. அதுவே பெரும் பாதிப்பாக அமைந்துவிட்டது என்று காம்ரான் அக்மல் தெரிவித்தார்.
 

click me!