SA vs BAN: எல்கர், பீட்டர்சன், பவுமா சிறப்பான அரைசதம்.! முதல் நாளில் தென்னாப்பிரிக்கா நல்ல பேட்டிங்

Published : Apr 08, 2022, 10:27 PM IST
SA vs BAN: எல்கர், பீட்டர்சன், பவுமா சிறப்பான அரைசதம்.! முதல் நாளில் தென்னாப்பிரிக்கா நல்ல பேட்டிங்

சுருக்கம்

வங்கதேசத்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிவரும் தென்னாப்பிரிக்க அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 278 ரன்கள் அடித்துள்ளது.  

வங்கதேச அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி அபார வெற்றி பெற்ற நிலையில், 2வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது.

தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர் எர்வீ  24 ரன்னில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரும் கேப்டனுமான டீன் எல்கர் அபாரமாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். அவருடன் 2வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கீகன் பீட்டர்சனும் அபாரமாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார்.

எல்கர் 70 ரன்னிலும், பீட்டர்சன் 64 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் டெம்பா பவுமாவும் அருமையாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். 67 ரன்கள் அடித்தார் பவுமா. ரியான் ரிக்கல்ட்டான் நன்றாக ஆடினார். ஆனால் 42 ரன்னில் ஆட்டமிழந்து அரைசதத்தை தவறவிட்டார்.

முதல் நாள் ஆட்ட முடிவில் தென்னாப்பிரிக்க அணி 5 விக்கெட் இழப்பிற்கு 278 ரன்கள் அடித்துள்ளது. 
 

PREV
click me!

Recommended Stories

IND vs SA: அபிஷேக் சர்மா அதிரடியால் ஈசியாக சேஸ் செய்த இந்திய அணி! தொடரில் 2-1 என முன்னிலை!
Tilak Varma: சேஸிங்கில் 'கிங்' கோலிக்கே சவால் விடும் திலக் வர்மா..! மெகா ரிக்கார்ட்..!