New Zealand vs South Africa டெஸ்ட்: ஹென்ரியிடம் சரணடைந்த தென்னாப்பிரிக்க அணி..! வெறும் 95 ரன்களுக்கு ஆல் அவுட்

By karthikeyan VFirst Published Feb 17, 2022, 2:37 PM IST
Highlights

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணி வெறும் 95 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
 

தென்னாப்பிரிக்க அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக நியூசிலாந்துக்கு சென்றுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் ஆடியது.

நியூசிலாந்து அணி:

டாம் லேதம் (கேப்டன்), வில் யங், டெவான் கான்வே, ஹென்ரி நிகோல்ஸ், டேரைல் மிட்செல், டாம் பிளண்டெல் (விக்கெட் கீப்பர்), காலின் டி கிராண்ட் ஹோம், கைல் ஜாமிசன், டிம் சௌதி, நீல் வாக்னர், மேட் ஹென்ரி.

தென்னாப்பிரிக்க அணி:

டீன் எல்கர் (கேப்டன்), சாரெல் எர்வீ, எய்டன் மார்க்ரம், ராசி வாண்டெர் டசன், டெம்பா பவுமா, ஜுபைர் ஹம்ஸா, கைல் வெரெய்ன் (விக்கெட் கீப்பர்), மார்கோ ஜான்சென், ககிசோ ரபாடா, க்ளெண்டன் ஸ்டர்மேன், டுவான் ஆலிவியர்.

முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்க அணி தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்தது. குறிப்பாக நியூசிலாந்து வலது கை ஃபாஸ்ட் பவுலர் மேட் ஹென்ரியின் பவுலிங்கில் மளமளவென ஆட்டமிழந்தனர் தென்னாப்பிரிக்க வீரர்கள். தென்னாப்பிரிக்க வீரர் எர்வீ ஜாமிசனின் பந்திலும், டெம்பா பவுமா டிம் சௌதியின் பந்திலும், கடைசி வீரர் ஆலிவியர் வாக்னெரின் பந்திலும் ஆட்டமிழந்தனர். இவர்கள் மூவரைத்தவிர மற்ற அனைத்து வீரர்களும் (7 வீரர்கள்) மேட் ஹென்ரியின் பவுலிங்கில் சரணடைய, தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 95 ரன்களுக்கு சுருண்டது.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிவரும் நியூசிலாந்து அணி, முதல் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 116 ரன்கள் அடித்துள்ளது. டாம் லேதம்  (15), வில் யங் (8) மற்றும் டெவான் கான்வே (36) ஆகிய மூவரும் ஆட்டமிழக்க, முதல் நாள் ஆட்ட முடிவில் ஹென்ரி நிகோல்ஸும், நைட் வாட்ச்மேன் நீல் வாக்னரும் களத்தில் உள்ளனர்.
 

click me!