IPL 2022: மும்பை இந்தியன்ஸின் சிறந்த ஆடும் லெவன்

Published : Feb 15, 2022, 10:38 PM IST
IPL 2022: மும்பை இந்தியன்ஸின் சிறந்த ஆடும் லெவன்

சுருக்கம்

ஐபிஎல் 15வது சீசனில் களமிறங்கும் மும்பை இந்தியன்ஸ் அணியின் சிறந்த உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.  

ஐபிஎல் 15வது சீசனுக்கான மெகா ஏலம் முடிந்துவிட்டது. சாம்பியன் அணியான மும்பை இந்தியன்ஸ் அணி வழக்கம்போலவே ஏலத்தில் நிதானமாக இருந்து, தங்களுக்கு தேவையான தரமான வீரர்களை தட்டி தூக்கியுள்ளது.

ரோஹித், பும்ரா, சூர்யகுமார் யாதவ், பொல்லார்டு ஆகிய 4 வீரர்களையும் தக்கவைத்திருந்த மும்பை இந்தியன்ஸ் அணி, ஏலத்தில் எத்தனை கோடி கொடுத்தேனும், இஷான் கிஷனை எடுக்கும் உறுதியில் இருந்த நிலையில், அவரை ரூ.15.25 கோடி கொடுத்து எடுத்தது.

அணியில் ஏற்கனவே, சமகாலத்தின் சிறந்த ஃபாஸ்ட் பவுலரான பும்ரா இருக்கும் நிலையில், ஜோஃப்ரா ஆர்ச்சரையும் ஏலத்தில் எடுத்தது மும்பை அணி. பேபி ஏபி என்றழைக்கப்படும் தென்னாப்பிரிக்காவின் அண்டர் 19 ஸ்டார் பிளேயர் டிவால்ட் பிரெவிஸ் மற்றும் இந்திய அண்டர் 19 வீரர் திலக் வர்மா ஆகியோரையும் அணியில் எடுத்தது.

ஸ்பின்னர்களாக முருகன் அஷ்வின் மற்றும் ஏற்கனவே மும்பை அணியில் ஆடிய மயன்க் மார்கண்டே ஆகியோரையும், வெளிநாட்டு வீரர்கள் டைமர் மில்ஸ், ரிலே மெரிடித், ஃபேபியன் ஆலன் ஆகியோரையும் அணியில் எடுத்தது. உள்நாட்டு கிரிக்கெட் ஜாம்பவானான இடது கை ஃபாஸ்ட் பவுலர் ஜெய்தேவ் உனாத்கத்தையும் எடுத்தது.

எல்லா காலக்கட்டத்திலுமே வலுவான கோர் செட்டப்பை கொண்ட சாம்பியன் அணியான மும்பை இந்தியன்ஸ் இந்த முறையும் வலுவான அணி காம்பினேஷனை பெற்றுள்ளது. அந்த அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.

கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் ஆகிய இருவரும் தொடக்க வீரர்களாக இறங்குவார்கள். 3ம் வரிசையில் சூர்யகுமார் யாதவ், 4ம் வரிசையில் பேபி ஏபி என்றழைக்கப்படும் டிவால்ட் பிரெவிஸ் ஆகியோர் ஆடுவார்கள். 5ம் வரிசையில் இந்திய அண்டர் 19 வீரர் திலக் வர்மாவும் 6ம் வரிசையில் சிங்கப்பூர் அணி வீரரான டிம் டேவிட்டும் இறங்க வாய்ப்புள்ளது.

ஆல்ரவுண்டரும் மும்பை அணியின் ஸ்டாருமான பொல்லார்டு ஆட்டத்தின் சூழலை பொறுத்து பேட்டிங் ஆர்டர் மாறி இறங்குவார். ஸ்பின்னர்களாக முருகன் அஷ்வின் - மயன்க் மார்கண்டே ஆகிய இருவரும், ஃபாஸ்ட் பவுலர்களாக ரிலே மெரிடித், ஜெய்தேவ் உனாத்கத், பும்ரா ஆகியோரும் ஆடுவார்கள். ஆர்ச்சர் அணியுடன் இணைந்துவிட்டால் இந்த காம்பினேஷன் மாறும்.

உத்தேச மும்பை இந்தியன்ஸ் அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, டிவால்ட் பிரெவிஸ், டிம் டேவிட், கைரன் பொல்லார்டு, மயன்க் மார்கண்டே, முருகன் அஷ்வின், ரிலே மெரிடித், ஜெய்தேவ் உனாத்கத், ஜஸ்ப்ரித் பும்ரா. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இந்திய அணி கேப்டன் கே.எல்.ராகுல், வீரர்களுக்கு அபராதம்.. ஐசிசி அதிரடி.. என்ன காரணம்?
IND vs SA 1st T20: ஹர்சித் ராணா நீக்கம்.. தமிழக வீரருக்கும் இடமில்லை.. இந்திய அணி பிளேயிங் லெவன்!