கேப்டன்சியிலிருந்து விலகச்சொல்லி நாங்க அழுத்தம் கொடுத்தோமா? யாருடா இதெல்லாம் கிளப்பிவிடுறது? கங்குலி விளக்கம்

By karthikeyan VFirst Published Oct 23, 2021, 3:06 PM IST
Highlights

விராட் கோலி இந்திய டி20 அணியின் கேப்டன்சியிலிருந்து விலகியதற்கு, பிசிசிஐ அழுத்தம் கொடுத்தது தான் காரணம் என்று ஒரு தகவல் பரவிய நிலையில், அதுகுறித்து விளக்கம்  அளித்துள்ளார் பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி.
 

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஒரு ஐசிசி டிராபியை கூட ஜெயிக்கவில்லை என்ற விமர்சனம் அவர் மீது இருந்துவந்தது. ஐபிஎல்லிலும் ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை என்ற அழுத்தமும் அவருக்கு இருந்தது. இவையனைத்தும் சேர்ந்து அவருக்கு மெகா அழுத்தமாக உருவெடுக்க, கூடவே அவரது பேட்டிங் ஃபார்மும் கடந்த 2 ஆண்டுகளாக மோசமாக உள்ளது.

இதையடுத்து தனது பணிச்சுமையை குறைத்துக்கொண்டு பேட்டிங்கில் கவனம் செலுத்த ஏதுவாக, டி20 உலக கோப்பைக்கு பிறகு இந்திய டி20 அணியின் கேப்டன்சியிலிருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்தார்.

விராட் கோலி கேப்டன்சியிலிருந்து விலகுவது குறித்த அறிவிப்பை வெளியிட்டபோது, பிசிசிஐ கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவே கோலி கேப்டன்சியிலிருந்து விலகியதாக ஒரு தகவல் பரவியது.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பை தொடங்கும் முன்பாக இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்ட 4 வீரர்கள்..!

இந்நிலையில், இதுகுறித்து விளக்கமளித்துள்ள பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி, விராட் கோலி டி20 அணியின் கேப்டன்சியிலிருந்து விலகியது எனக்கே சர்ப்ரைஸாகத்தான் இருந்தது. பிசிசிஐ தரப்பிலிருந்து கோலிக்கு எந்தவிதமான அழுத்தமும் கொடுக்கப்படவில்லை என்று கங்குலி தெரிவித்துள்ளார்.
 

click me!