இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் எந்த அணி வெல்லும்? டி20 உலக கோப்பையை எந்த அணி வெல்லும்? டேனிஷ் கனேரியா அதிரடி

By karthikeyan VFirst Published Oct 22, 2021, 10:19 PM IST
Highlights

டி20 உலக கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டியில் எந்த அணி வெல்லும் மற்றும் எந்த அணி கோப்பையை வெல்லும் என்று டேனிஷ் கனேரியா கருத்து தெரிவித்துள்ளார்.
 

இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இருதரப்பு தொடரில் ஆடுவதில்லை.  கடந்த பல ஆண்டுகளாகவே இரு அணிகளும் இருதரப்பு தொடரில் ஆடுவதில்லை. ஐசிசி தொடர்களில் மட்டுமே இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுகின்றன.

அதனால் உலக கோப்பை மற்றும் ஆசிய கோப்பை தொடர்களில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதும் போட்டிகள் உலகளவில் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. உலக கிரிக்கெட் ரசிகர்களே இந்த போட்டியை கான ஆர்வத்துடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

உலக கோப்பை தொடர்களில் இதுவரை இந்திய அணியை பாகிஸ்தான் வீழ்த்தியதேயில்லை. இந்தியாவை உலக கோப்பைகளில் வீழ்த்தியதேயில்லை என்ற அழுத்தமே இந்தியாவை எதிர்கொள்ளும்போது பாகிஸ்தானுக்கு எமனாக அமைந்துவிடுகிறது.

அந்தவகையில், இந்த டி20 உலக கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டியில், உலக கோப்பை தொடர்களில் பாகிஸ்தானுக்கு எதிரான 100% வின்னிங் ரெக்கார்டை தக்கவைக்கும் முனைப்பில் இந்திய அணியும், உலக கோப்பையில் முதல் முறையாக கோப்பையில் இந்தியாவை வீழ்த்தும் முனைப்பில் பாகிஸ்தானும் களமிறங்குகின்றன.

இந்நிலையில், இந்த போட்டி குறித்து பேசியுள்ள டேனிஷ் கனேரியா, இந்தியா- பாகிஸ்தான் இடையேயான போட்டியில் எந்த அணி அழுத்தத்தை சிறப்பாக கையாள்கிறதோ அந்த அணி தான் வெற்றி பெறும். இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் வலுவாக இருக்கிறது. ஆனால் பாகிஸ்தான் அணி பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வானையே அதிகமாக சார்ந்திருக்கிறது. அதனால் ஷாஹீன் அஃப்ரிடி மீதான அழுத்தம் அதிகம்.

டி20 உலக கோப்பையை ஆசிய அணி தான் வெல்லும் என்று டேனிஷ் கனேரியா தெரிவித்துள்ளார்.
 

click me!