எனக்கு அவருலாம் ஒரு ஆளே இல்லங்க - ஸ்மித்!! உனக்காகத்தான் தம்பி வெயிட் பண்ணேன் ஆனால் நீ வரல - ஆர்ச்சர்!! சபாஷ் சரியான போட்டி

By karthikeyan VFirst Published Aug 29, 2019, 3:21 PM IST
Highlights

ஆஷஸ் தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக ஸ்மித் மற்றும் ஆர்ச்சர் ஆகிய இருவருக்கும் இடையே வார்த்தைப்போர் தீவிரமடைந்துள்ளது. 
 

ஆஷஸ் தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக ஸ்மித் மற்றும் ஆர்ச்சர் ஆகிய இருவருக்கும் இடையே வார்த்தைப்போர் தீவிரமடைந்துள்ளது. 

ஆஷஸ் தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரின் 3 போட்டிகள் முடிந்துள்ள நிலையில், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றுள்ளன. ஒரு போட்டி டிராவில் முடிந்தது. 

ஒன்றரை ஆண்டுக்கு பிறகு ஆஷஸ் தொடரின் முதல் போட்டிதான், ஸ்மித் இறங்கிய முதல் டெஸ்ட் போட்டி. அந்த போட்டியில் 2 இன்னிங்ஸ்களிலும் சதமடித்து, ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு காரணமாக திகழ்ந்தார். இரு அணிகளுக்கும் இடையேயான வித்தியாசமாக ஸ்மித் திகழ்ந்தார். இதையடுத்து இரண்டாவது போட்டியில் ஸ்மித்தை சமாளிப்பதற்காகவே ஆர்ச்சரை இறக்கியது இங்கிலாந்து அணி. 

லார்ட்ஸில் நடந்த அந்த போட்டியிலும் ஸ்மித் சிறப்பாக ஆடினார். ஸ்மித்தின் விக்கெட்டை வீழ்த்துவார் என்ற எதிர்பார்ப்பில் இங்கிலாந்து அணியில் எடுக்கப்பட்ட ஆர்ச்சர், ஸ்மித்தின் விக்கெட்டை வீழ்த்துவதற்கு பதிலாக ஸ்மித்தையே வீழ்த்தினார். ஆர்ச்சர் 148 கிமீ வேகத்தில் வீசிய பவுன்ஸர், ஸ்மித்தின் பின் கழுத்து பகுதியில் அடித்தது. அதனால் பெவிலியன் திரும்பிய ஸ்மித், மீண்டும் களத்திற்கு வந்து சிறிது நேரம் ஆடினார். ஆனால் 92 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆர்ச்சரின் பவுன்ஸரில் பின் கழுத்தில் அடிவாங்கிய ஸ்மித்திற்கு தலைவலி, கழுத்து வலி இருந்ததால், இரண்டாவது இன்னிங்ஸில் அவர் ஆடவில்லை. அவருக்கு பதிலாக லபுஷேன் ஆடினார். 

மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் ஸ்மித் ஆடவில்லை. அந்த போட்டியிலும் லபுஷேன் தான் ஆடினார். நான்காவது டெஸ்ட் போட்டி வரும் செப்டம்பர் 4ம் தேதி மான்செஸ்டாரில் தொடங்குகிறது. இந்நிலையில், ஸ்மித் - ஆர்ச்சருக்கு இடையே வார்த்தைப்போர் நடந்துள்ளது. 

ஆர்ச்சர் குறித்து பேசிய ஸ்மித், ஆர்ச்சரால் என்னை அவுட்டாக்க முடியவில்லை. அவர் எனது பின்னங்கழுத்தில் அடித்தாரே தவிர, எனது விக்கெட்டை வீழ்த்தவில்லை. ஆர்ச்சரை தவிர மற்ற பவுலர்கள் என்னை அவுட்டாக்கினர். அவர்கள் கூட என் மீது ஆதிக்கம் செலுத்தி பந்துவீசினர். ஆனால் ஆர்ச்சரால் என்னை அவுட்டாக்க முடியவில்லை என்று ஸ்மித் தெரிவித்தார். 

ஸ்மித்திற்கு பதிலளித்துள்ள ஆர்ச்சர், கரெக்ட்... நான் ஸ்மித்தின் விக்கெட்டை வீழ்த்தவில்லை. ஆனால் ஸ்மித் களத்திலே இல்லாதபோது என்னால் எப்படி அவுட்டாக்க முடியும்? அவர் காயத்தால் வெளியேறிவிட்டு திரும்பிவந்த பின்னர், நான் பவுலிங் போடுவதற்கு முன்னதாகவே, அவர் அவுட்டாகிவிட்டார். அதுமட்டுமல்லாமல், ஒருவரை அவுட்டாக்குவதற்காக நான் ஆடவில்லை. எங்கள் அணியை ஆஷஸ் தொடரை வெல்லவைப்பதுதான் என் இலக்கு என்று ஆர்ச்சர் பதிலடி கொடுத்தார். 
 

click me!