தூக்கியடிக்கப்பட்ட டிராவிட்.. இந்தியா ஏ, அண்டர் 19 அணிகளுக்கு புதிய பயிற்சியாளர்கள் நியமனம்

By karthikeyan VFirst Published Aug 29, 2019, 1:49 PM IST
Highlights

தரமான இளம் வீரர்களை உருவாக்கி இந்திய அணிக்கு கொடுக்கும் தனது பணியை செவ்வனே செய்துவந்த ராகுல் டிராவிட்டுக்கு பதிலாக இந்தியா ஏ மற்றும் அண்டர் 19 அணிகளுக்கு புதிய பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

இந்தியா ஏ மற்றும் இந்தியா அண்டர் 19 அணிகளுக்கு தலைமை பயிற்சியாளராக இருந்துவந்தார் ராகுல் டிராவிட். பிரித்வி ஷா, ஷுப்மன் கில் போன்ற இளம் வீரர்களை மெருகேற்றிய ராகுல் டிராவிட், மயன்க் அகர்வால், கேஎல் ராகுல் உள்ளிட்ட வீரர்களுக்கும் இந்தியா ஏ அணியில் ஆடியபோது நல்ல ஆலோசனைகளை வழங்கி அவர்களது ஆட்டத்திறனையும் மேம்படுத்தினார். 

தரமான இளம் வீரர்களை உருவாக்கி இந்திய அணிக்கு கொடுக்கும் தனது பணியை செவ்வனே செய்துவந்த ராகுல் டிராவிட், தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக நியமிக்கப்பட்டார். அதனால் இந்தியா ஏ மற்றும் அண்டர் 19 அணிகளின் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். 

இந்நிலையில், இந்தியா ஏ மற்றும் அண்டர் 19 அணிகளுக்கு புதிய பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சவுராஷ்டிரா அணியின் முன்னாள் கேப்டன் சித்தன்சு கோட்டாக் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராகவும், இந்திய அணியின் முன்னாள் ஃபாஸ்ட் பவுலர் பராஸ் மஹாம்ப்ரே அண்டர் 19 அணியின் தலைமை பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

இடது கை பேட்ஸ்மேனான கோட்டாக், 130 முதல்தர போட்டிகளில் ஆடியுள்ளார். இந்தியா ஏ அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருந்திருக்கிறார். டிராவிட்டுக்கு கீழ் பணியாற்றிய அவர், டிராவிட் இடத்தில் நியமிக்கப்பட்டுள்ளார். அண்டர் 19 அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருக்கும் பராஸ் மஹாம்ப்ரேவும் டிராவிட்டுடன் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இந்தியா ஏ அணியின் பவுலிங் பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் ஸ்பின் பவுலர் ரமேஷ் பவார் நியமிக்கப்பட்டுள்ளார். 
 

click me!