ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை எந்த அணி வெல்லும்..? ஆருடத்தில் கூட அதிரடி காட்டும் சேவாக்

By karthikeyan VFirst Published Aug 29, 2019, 12:50 PM IST
Highlights

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டு நடத்தப்படுகிறது. ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டிதான் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் முதல் போட்டி. 

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டு நடத்தப்படுகிறது. ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டிதான் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் முதல் போட்டி. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு நடக்கும் டெஸ்ட் போட்டிகள் அனைத்துமே டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான போட்டிதான். 

அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 9 அணிகளும் ஆடும் அனைத்து டெஸ்ட் போட்டிகளும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான போட்டி. 

அனைத்து அணிகளுமே 3 உள்நாட்டு மற்றும் 3 வெளிநாட்டு தொடர்களில் ஆடும். மொத்தமாக 27 டெஸ்ட் தொடர்கள் நடக்கவுள்ளன. இவற்றின் முடிவில் புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களில் இருக்கும் அணிகளுக்கு இடையே 2021ம் ஆண்டு இங்கிலாந்தில் இறுதி போட்டி நடக்கும். 

டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில், ஒரு டெஸ்ட் தொடருக்கு மொத்தமாக 120 புள்ளிகள். ஒரு குறிப்பிட்ட தொடரில் எத்தனை போட்டிகள் நடக்கிறதோ, அந்த நம்பரால் 120ஐ வகுத்தால் கிடைக்கும் கிடைக்கும் பாயிண்ட் தான், ஒரு போட்டியில் அடையும் வெற்றிக்கான பாயிண்ட்.

வெற்றி அடையும் அணிக்கான பாயிண்ட் = ( 120/அந்த தொடரின் போட்டிகளின் எண்ணிக்கை).

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான டெஸ்ட் தொடர் 2 போட்டிகள் கொண்ட தொடர் என்பதால் ஒரு போட்டியில் வென்றால் 60 புள்ளிகள். அந்தவகையில், வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றதால் 60 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் உள்ளது. 

இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரும் 2 போட்டிகள் கொண்ட தொடர் என்பதால், இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றதால், இரு அணிகளுமே தலா 60 புள்ளிகளை பெற்றுள்ளன. 

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் தொடர் 5 போட்டிகள் கொண்ட தொடர் என்பதால் ஒரு போட்டியில் வென்றால் வெறும் 24 புள்ளிகள் மட்டுமே கிடைக்கும். இரு அணிகளுமே தலா ஒரு வெற்றி மற்றும் ஒரு டிராவுடன் இருப்பதால் இரு அணிகளுமே 32 புள்ளிகளை பெற்றுள்ளன. 

இந்நிலையில், ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை இந்திய அணி வெல்லுமா என்ற கேள்விக்கு பதிலளித்த சேவாக், 2 ஆண்டுகள் என்பது நீண்டகாலம். ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2 ஆண்டுகள் நடக்கவுள்ளதால் அவ்வளவு எளிதாக கணித்துவிடமுடியாது. ஆனால் இந்திய அணி நல்ல நிலையில் உள்ளது. தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரியின் இரண்டாவது இன்னிங்ஸுக்கு எனது வாழ்த்துக்கள். விராட் கோலிக்கும் வாழ்த்துக்கள் என்று சேவாக் தெரிவித்துள்ளார். 
 

click me!