
மாதந்தோறும், ஆண்டுதோறும் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் வீரர்களை தேர்வு செய்து அவர்களுக்கு பல்வேறு பிரிவுகளில் ஐசிசி விருது வழங்கி வருகிறது. அந்த வகையில் கடந்த ஜனவரி மாதம் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடந்தது. இதில், நியூசிலாந்து அணியின் டெவோன் கான்வே தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இங்கிலாந்தின் உலகக் கோப்பை வின்னிங் கேப்டன் ஓய்வு அறிவிப்பு!
கடந்த ஆண்டு வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 110 ரன்கள் குவித்தார். இதையடுத்து, கடந்த மாதம் நடந்த இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் அறிமுகமானார். இதையடுத்து நடந்த ஒரு நாள் போட்டியில் 3ஆவது ஆட்டத்தில் சுப்மன் கில் 116 ரன்கள் குவித்தார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் சுப்மன் கில் 208 ரன்கள் குவித்தார். 3ஆவது ஒரு நாள் போட்டியில் 112 ரன்கள் எடுத்தார். இதே போன்று 3ஆவது டி20 போட்டியில் சுப்மன் கில் 126 ரன்கள் குவித்தார். இப்படி ஒவ்வொரு போட்டியிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சுப்மன் கில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார்.
கடந்த மாதத்திற்கான ஐசிசி சிறந்த வீரருக்கான பரிந்துரை பட்டியலில் பேட்டிங்கில் சுப்மன் கில் இடம் பெற்றிருந்தார். நியூசிலாந்தின் டெவோன் கான்வேயும் இடம் பெற்றிருந்தார். இந்த நிலையில், ஜனவரி மாதத்திற்கான ஐசிசி சிறந்த வீரருக்கான விருதுக்கு சுப்மன் கில்லிற்கு வழங்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் சுப்மன் கில் இடம் பெறவில்லை. 2ஆவது போட்டியில் அவருக்கு வாய்ப்பளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.