இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான 3ஆவது சூப்பர் 4 சுற்று போட்டி நாளை நடக்க உள்ள நிலையில், பாகிஸ்தானை கண்டாலே பயமாக இருப்பதாக இந்திய அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில் வெளிப்படையாக பேசியுள்ளார்.
ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் கடந்த 30 ஆம் தேதி முதல் நடந்து வருகிறது. லீக் சுற்று போட்டிகள் முடிந்த நிலையில், தற்போது ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், 3ஆவது சூப்பர் 4 சுற்று போட்டி நாளை நடக்க உள்ளது. இந்தப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. கொழும்புவில் நடக்கும் இந்தப் போட்டியானது மழையால் பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
ஒருவேளை போட்டியானது மழையால் பாதிக்கப்பட நேர்ந்தால் ரிசர்வ் டே என்று சொல்லப்படும் அடுத்த நாள் போட்டி நடைபெறும் என்று ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. இந்த நிலையில், இந்தப் போட்டிக்கு முன்னதாக இந்திய அணியின் ஓபனிங் பேட்ஸ்மேனான சுப்மன் கில் பாகிஸ்தான் பந்து வீச்சு குறித்து பேசியுள்ளார்.
India vs Pakistan: இந்தியா எல்லாம் ஜூஜூபி மாதிரி, அப்படியே ஊதி தள்ளிடுவோம் – பாபர் அசாம்!
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டியில் ஷாஹீன் அஃப்ரிடி, நசீம் ஷா, ஹரீஷ் ராஃப் ஆகியோரது சிறப்பான பந்து வீச்சில் இந்திய அணி 266 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. எனினும், இந்தப் போட்டியானது மழையால் பாதிக்கப்படவே இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் பகிர்ந்து வழங்கப்பட்டது.
இந்த நிலையில் தான் நாளை மீண்டும் பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ளது. செய்தியாளர்கள் சந்திப்பின் போது பாகிஸ்தான் பந்து வீச்சைப் பார்த்தாலே பயமாக இருக்கிறது. ஏனென்றால் அவர்களிடம் தரமான பந்து வீச்சு இருக்கிறது. நாங்கள் மற்ற அணிகளுடன் விளையாடிய அளவிற்கு கூட பாகிஸ்தான் அணியுடன் ஆடவில்லை. இது போன்ற பந்து வீச்சாளர்களை அடிக்கடி சந்திக்கவில்லை என்றால் அவர்களது பவுலிங்கில் விளையாடுவது கடினம் தான் என்று கூறியுள்ளார்.
மேலும், பாபர் அசாம் ஒரு உலகத் தரம் வாய்ந்த வீரர், நாங்கள் அவரைப் பார்த்து வியக்கிறோம் என்று அவர் கூறியுள்ளார். நேற்று சுப்மன் கில் தனது 24 ஆவது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினார். சக வீரர்களுடன் இணைந்து கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.