இலங்கை மற்றும் பாகிஸ்தானில் கடந்த 2 மாதங்களாக கிரிக்கெட் விளையாடி வருவதால், இந்தியாவை எங்களால் எளிதில் வீழ்த்த முடியும் என்று பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் கூறியுள்ளார்.
ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்று போட்டிகள் தற்போது நடந்து வருகிறது. இதன் முதல் சூப்பர் 4 போட்டியில் வங்கதேச அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வீழ்த்தியத்து. இதையடுத்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான அடுத்த சூப்பர் 4 சுற்று போட்டி நாளை கொழும்புவில் நடக்க உள்ளது.
இந்தப் போட்டியானது மழையால் பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. எனினும், ரிசர்வ் டே என்று சொல்லப்படும் அடுத்த நாள் போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டியானது இந்தியா பேட்டிங் ஆடிய நிலையில் மழையால் ரத்து செய்யப்பட்டது.
இந்தப் போட்டியில் இந்திய அணியின் முன்வரிசை வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறியது அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்தது. இதனால் நாளை நடக்க உள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியானது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், தான் செய்தியாளர்களைச் சந்தித்த பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் கடந்த 2 மாதங்களாக இங்கு தான் கிரிக்கெட் விளையாடி வருகிறோம். பாகிஸ்தானிலும் இலங்கையிலும் தொடர்ந்து விளையாடி வந்திருக்கிறோம். லங்கா பிரீமியர் லீக், இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் தொடர்களில் விளையாடி இருக்கிறோம்.
ஆதலால், நாளை நடக்க உள்ள சூப்பர் 4 சுற்றில் இந்திய அணியை எளிதில் வீழ்த்துவோம் என்ற நம்பிக்கை உள்ளது. பிளேயர்ஸ்களின் உடல்நலனில் முக்கியத்துவம் செலுத்தி வருகிறோம். வங்கதேச அணிக்கு எதிராக நாங்கள் எப்படி விளையாடினோமோ அதே போன்று இந்தியாவுக்கு எதிராகவும் விளையாடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது என்று கூறியுள்ளார்.
ENG vs NZ: ராகுல் டிராவிட் விராட் கோலி சாதனையை முறியடித்த டெவான் கான்வே – டேரில் மிட்செல் ஜோடி!