இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அறிமுகமான இந்திய அணியின் சுப்மன் கில் தான் சந்தித்த முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து அசத்தியுள்ளார்.
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி மும்பையில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி இஷான் கிஷான் மற்றும் சுப்மன் கில் இருவரும் இந்திய அணியின் ரன் கணக்கை தொடங்கினர். முதல் ஓவரிலேயே இஷான் கிஷான் ஒரு சிக்சர், 2 பவுண்டரி, 2 ரன்கள் எடுக்க கூடுதலாக வைடு கிடைக்க மொத்தமாக 17 ரன்கள் கிடைத்தது. இதையடுத்து 2ஆவது ஓவரை பிடித்த சுப்மன் கில்லுக்கு முதல் பந்து வைடாக போக அடுத்த பந்திலேயே பவுண்டரி அடித்து அசத்தினார்.
ஒரு கண்டத்திலிருந்து தப்பித்து இன்னொரு கண்டத்தில் சிக்கிய சஞ்சு சாம்சன்!
இதையடுத்து கூடுதலாக 3 ரன்கள் எடுக்க தீக்ஷனா வீசிய 2.3 ஓவரில் எல்பிடபிள்யூ முறையில் அவுட்டானார். நடுவர் அவுட் கொடுக்க, தேவையில்லாமல் ரெவியூ எடுக்க, டிவி ரிப்ளேயில் தெளிவாக பந்து ஸ்டெம்பில் படவே, மூன்றாவது நடுவரும் அவுட் கொடுத்தார். இதையடுத்து தனது அறிமுக போட்டியிலேயே சுப்மன் கில் 7 ரன்கள் எடுத்து பெரிதாக ஒன்றும் சோபிக்காமல் ஆட்டமிழந்தார். இது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது.
சொந்த மண்ணில் இலங்கை அணிக்கு எதிராக சாதிக்குமா இந்தியாவின் இளம் படை?
இதே போன்று சஞ்சு சாம்சனும், 5 ரன்களில் வெளியேறினார். தனஞ்ஜெயா டி சில்வா 6ஆவது ஓவரின் 3ஆவது பந்தில் அடித்த கேட்சை அசலாங்கா கோட்டை விட அதே ஓவரில் 5ஆவது பந்தில் ஆஃப் சைடு கவர் திசையில் நின்றிருந்த மதுசங்காவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஒரு முறை தான் கேட்சை விடுவார்கள். அப்படி விடும் போதே சுதாரித்துக் கொண்டு ஆட வேண்டும். அப்படி ஆடாமல், மறுபடியும் மறுபடியும் தூக்கி அடித்து கேட்ச் கொடுத்து பரிதாபமாக வெளியேறினார்.
இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடர்: திரும்ப வந்த பும்ரா: இனி எல்லாமே நல்லாதான் நடக்கும்!
இந்திய அணி:
இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), தீபக் கூடா, அக்ஷர் படேல், ஹர்ஷல் படேல், ஷிவம் மாவி, உம்ரான் மாலிக், யுஸ்வேந்திர சகால்
இலங்கை அணி:
பதும் நிசாங்கா, குசால் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), தனஞ்செயா டி சில்வா, சரித் அசலாங்கா, பனுகா ராஜபக்சா, தசுன் ஷனாகா (கேப்டன்), வனிண்டு ஹசரங்கா, சமிகா கருணாரத்னே, மஹீத் தீக்ஷனா, கசுன் ரஜிதா, தில்சன் மதுஷங்கா.
முதல் முறையாக டி20ல் கால் பதிக்கும் சுப்மன் கில், ஷிவம் மாவி: டாஸ் வென்ற இலங்கை பவுலிங்!