ஒரே சதத்தில் ரோஹித் சர்மாவின் சாதனையையே தகர்த்த ஷுப்மன் கில்..! யுவராஜ் சிங், கோலிக்கு அடுத்த இடம்

By karthikeyan VFirst Published Aug 22, 2022, 7:56 PM IST
Highlights

ஜிம்பாப்வேவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் அடித்த சதத்தின் மூலம் ஒரு அபாரமான சாதனையை படைத்துள்ளார் ஷுப்மன் கில்.
 

இந்திய அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடியது.  முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என தொடரை வென்றுவிட்ட நிலையில் கடைசி போட்டி இன்று நடந்துவருகிறது.

முதல் போட்டியில் ஓபனிங்கில் இறங்கி அபாரமாக ஆடிய ஷுப்மன் கில், 2வது போட்டியில் 3ம் வரிசையில் இறங்கினார். கடைசி போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 50 ஓவரில் 289 ரன்கள் அடித்தது. ஷுப்மன் கில் அதிரடியாக பேட்டிங் ஆடி சதமடித்தார்.  97 பந்தில் 130 ரன்களை குவித்தார் ஷுப்மன் கில்.

இதையும் படிங்க - ஜிம்பாப்வே வீரருக்கு மன்கட் எச்சரிக்கை விடுத்த தீபக் சாஹர்..! வைரல் வீடியோ

இந்த சதத்தின் மூலம் தனித்துவமான சாதனையை படைத்தார். வெளிநாட்டில் ஒருநாள் கிரிக்கெட்டில் இளம் வயதில் சதமடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் யுவராஜ் சிங் மற்றும் விராட் கோலிக்கு அடுத்த 3ம் இடத்தை பிடித்துள்ளார் ஷுப்மன் கில். இந்த பட்டியலில் ரோஹித் சர்மாவை முந்தியுள்ளார் கில்.

கில் இன்று சதமடித்தபோது அவரது வயது 22 வயது 348 நாட்கள். எனவே 23 வயது 28 நாட்களில்  ஜிம்பாப்வேவில் சதமடித்த ரோஹித் சர்மாவின் சாதனையை முறியடித்துள்ளார். இந்த பட்டியலில் முதலிரண்டு இடங்களில் யுவராஜ் சிங் மற்றும் விராட்  கோலி ஆகிய இருவரும் உள்ளனர்.

இதையும் படிங்க - தோனியா சச்சினா..? ருதுராஜ் கெய்க்வாட்டின் சாமர்த்தியமான பதில்

யுவராஜ் சிங் - 22 வயது 41 நாட்கள் - ஆஸ்திரேலியா

விராட் கோலி - 22 வயது 315 நாட்கள் - இங்கிலாந்து
 

click me!