இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 302 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ஷ்ரேயாஸ் ஐயரிடம் பேட்டிங்கில் உள்ள வீகன்ஸ் குறித்து செய்தியாளர் கேட்ட கேள்விக்கு கோபமடைந்த ஷ்ரேயாஸ் ஐயர் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
இந்தியா – இலங்கை இடையிலான 33ஆவது லீக் போட்டி நேற்று நடந்தது. இதில், முதலில் விளையாடிய இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 357 ரன்கள் குவித்தது. சுப்மன் கில் 92 ரன்களும், விராட் கோலி 88 ரன்களும், ஷ்ரேயாஸ் ஐயர் 82 ரன்களும் எடுத்தனர். பின்னர் ஆடிய இலங்கை 55 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 302 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக முதல் அணியாக இந்தியா அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
India vs Sri Lanka: இளம் ரசிகருக்கு தனது ஷூவை பரிசாக அளித்த ரோகித் சர்மா – வைரலாகும் வீடியோ!
இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியில் இடம் பெற்ற ஷ்ரேயாஸ் ஐயர் இதுவரையில் விளையாடிய 7 போட்டிகளில் முறையே 0, 25 (நாட் அவுட்), 53 (நாட் அவுட்), 19, 33, 4 மற்றும் 82 ரன்கள் என்று எடுத்துள்ளார். 7 போட்டிகளில் 2 அரைசதம் மட்டுமே அடித்துள்ளார். தொடர்ந்து 3 போட்டிகளில் ஷார்ட் பிட்ச் பந்துகளில் ஆட்டமிழந்துள்ளார். இங்கிலாந்திற்கு எதிரான போட்டியிலும் ஷாட்ர் பிட்ச் பந்தை அடிக்க முயற்சித்து ஆட்டமிழந்துள்ளார்.
India vs Sri Lanka: ஒரே ஆண்டில் 3ஆவது முறை 73, 50, 55 ஸ்கோர் - இலங்கையை துவம்சம் செய்யும் இந்தியா!
இந்த நிலையில், தான் நேற்று நடந்த இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் ஷார்ட் பிட்ச் பந்துகளில் சிறப்பாக விளையாடி ரன்கள் சேர்த்தார். ஆனால், அவர் வைடராக வீசப்பட்ட பந்தை அடிக்க முயற்சித்து கடைசி நேரத்தில் 82 ரன்களில் வெளியேறினார். எனினும், இந்தப் போட்டியில் இந்திய அணி 302 ரன்கள் குவித்தது.
இந்த நிலையில், போட்டிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ஷ்ரேயாஸ் ஐயரிடம், இந்த உலகக் கோப்பையிலிருந்து உங்களுக்கு ஷார்ட் பந்துகள் தான் பிரச்சனையாக இருந்து வந்துள்ளது. இன்று நிறைய புல் ஷாட்டுகளை நாங்கள் பார்த்தோம். அடுத்து தென் ஆப்பிரிக்காவுடன் நடக்க உள்ள போட்டிக்கு எப்படி ஷார்ட் பந்துகளை எதிர்கொள்வீர்கள்? என்று செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அது என்ன பிரச்சனை என்று சொல்கிறீர்கள்? என்ன சொல்ல வருகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு அந்த பத்திரிக்கையாளர், நான் பிரச்சனை என்று சொல்லவில்லை. ஆனால், ஷார்ட் பந்துகள் உங்களுக்கு பிரச்சனையாக உள்ளது என்றார்.
Shreyas giving clarification on his purported weakness against short balls..
pic.twitter.com/5FQP5hhACk
அதன் பிறகு ஆத்திரமடைந்த ஷ்ரேயாஸ், எனக்கு பிரச்சனையா? நான் எத்தனை புல் ஷாட்டுகளை விளையாடியிருக்கிறேன் தெரியுமா? ஷார்ட் பந்துக்கு எதிராக எந்த பிரச்சனையும் இல்லை. நீங்கள் ஒரு பந்தை அடிக்க முயற்சி செய்கிறீர்கள் என்றால், அது ஷார்ட் பந்தாகவோ அல்லது ஓவர் பிட்ச் பந்தாகவோ இருந்தாலும் அவுட்டாகும் நிலை ஏற்படும்
நான் 2 அல்லது 3 முறை பவுல்டு அவுட் ஆனால், நீங்க எல்லோரும், அவரால் இனி ஸ்விங்கிங் பந்தில் விளையாட முடியாது. சீமிங் பந்தில் கட் ஷாட் ஆட முடியாது" என நினைத்துக் கொள்கிறீர்கள் என்றார். எனக்கு என் மீது நம்பிக்கை இருக்கிறது. எவ்வளவு விளையாடியிருக்கிறேன் என்று எனக்கு தெரியும். அணி என்னை நம்பி எனக்கு ஆதரவு அளிக்கும் வரையில் நான் கவலைப்பட தேவையில்லை என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.