India vs Sri Lanka: இளம் ரசிகருக்கு தனது ஷூவை பரிசாக அளித்த ரோகித் சர்மா – வைரலாகும் வீடியோ!

By Rsiva kumar  |  First Published Nov 3, 2023, 10:04 AM IST

இலங்கைக்கு எதிரான 33ஆவது லீக் போட்டியில் இந்திய அணி 302 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இளம் கிரிக்கெட் ரசிகருக்கு தனது ஷூவை பரிசாக அளித்துள்ளார்.


இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் உலகக் கோப்பை கிரிக்கெட்டின் 33ஆவது லீக் போட்டி நேற்று நடந்தது. இதில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ரோகித் சர்மா 4 ரன்களில் ஆட்டமிழந்தார். சுப்மன் கில் 92 ரன்களும், விராட் கோலி 88 ரன்களும், ஷ்ரேயாஸ் ஐயர் 82 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 35 ரன்களும் எடுக்கவே இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 357 ரன்கள் குவித்தது.

India vs Sri Lanka: ஒரே ஆண்டில் 3ஆவது முறை 73, 50, 55 ஸ்கோர் - இலங்கையை துவம்சம் செய்யும் இந்தியா!

Tap to resize

Latest Videos

பின்னர் கடின இலக்கை துரத்திய இலங்கை அணியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பதும் நிசாங்கா 0, திமுத் கருணாரத்னே, குசால் மெண்டிஸ், சதீரா சமரவிக்ரமா 0, சரித் அசலங்கா 1, ஏஞ்சலோ மேத்யூஸ் 12 ரன்கள் என்று ஒவ்வொருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

India vs Sri Lanka: 86 வயதில் முதல் முறையாக உலகக் கோப்பை போட்டியை பார்க்க வந்த தாத்தா!

இதையடுத்து களமிறங்கிய பின்வரிசை வீரர்களும் துஷான் ஹேமந்தா 0, துஷ்மந்தா சமீரா 0, கசுன் ரஜீதா 14, தில்ஷன் மதுஷங்கா 5 ரன்கள் என்று சொற்ப ரன்களில் வெளியேறினர். மஹீஷ் தீக்‌ஷனா 12 ரன்களுடன் களத்தில் இருந்தார். இறுதியாக இலங்கை 19.4 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 55 ரன்கள் மட்டுமே எடுத்து 302 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணிக்காக அதிக வெற்றிகளை குவித்து சச்சின் சாதனையை முறியடித்த கோலி!

இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதன் மூலமாக விளையாடிய 7 போட்டிகளிலும் வெற்றி பெற்று 14 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடம் பிடித்துள்ளது. அதுமட்டுமின்றி முதல் அணியாக அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்த நிலையில் இந்தப் போட்டிக்குப் பிறகு இந்திய அணியின் கேப்டனான ரோகித் சர்மா தனது காலணி ஷூவை இளம் கிரிக்கெட் ரசிகருக்கு தனது கையால் பரிசாக அளித்துள்ளார். இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பிள்ளையார் சுழி போட்ட பும்ரா, சிராஜ் – பக்காவா முடித்து கொடுத்து சாதனை படைத்த முகமது ஷமிக்கு ஆட்டநாயகன் விருது!

 

Rohit Sharma took selfies with fans post presentation ceremony and also gifted his shoe to a kid in the MCA STAND. Heartwarming gesture! pic.twitter.com/30PzVS64NL

— Sameer Allana (@HitmanCricket)

 

click me!