கிரிக்கெட் மீதான ஆர்வம் ரசிகர்களிடையே அதிகரித்து வரும் நிலையில் 86 வயதான தாத்தா ஒருவர் முதல் முறையாக உலகக் கோப்பையை பார்க்க வந்துள்ளார்.
கிரிக்கெட் என்றாலே பிடிக்காத ரசிகர்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் ரசிக்க கூடிய விளையாட்டாக கிரிக்கெட் இருக்கிறது. இதில், டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளின் தாக்கம் நாளுக்கு நாள் ரசிகர்களிடையே அதிகரித்து வருகிறது. இதற்கு மைதானங்களில் கூடும் ரசிகர்களே உதாரணம்.
அந்த வகையில், நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 33ஆவது லீக் போட்டி நடந்தது. இந்தப் போட்டியை பார்ப்பதற்கு கிரிக்கெட் பிரபலங்களின் மனைவிகள், முன்னாள் ஜாம்பவான்கள், யுஸ்வேந்திர சகால், பாலிவுட் நடிகர்கள், பிசிசிஐ அதிகாரிகள் என்று பலரும் வருகை தந்தனர்.
இந்த நிலையில் தான், 86 வயதான தாத்தா ஒருவர் முதல் முறையாக உலகக் கோப்பை போட்டியை பார்க்க வந்துள்ளார். தனது இத்தனை ஆண்டுகால வாழ்க்கையில் ஒரு நாள் கூட அவர் உலகக் கோப்பை போட்டியை நேரில் பார்த்ததில்லை. இது தொடர்பான ஷாட்டை கையில் ஏந்தியபடி கேமரா மேன் கண்ணில் பட்டுள்ளார். அவரும் கச்சிதமாக 86 வயதான தாத்தாவை கவர் செய்துள்ளார்.
இது தொடர்பான புகைப்படம் தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து 357 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய இலங்கை அணி 55 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்து மோசமான சாதனை படைத்தது. இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதன் மூலமாக முதல் அணியாக அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
முதல் முறையாக உலகக் கோப்பையில் இந்தியாவிற்கு எதிராக குறைவான ஸ்கோர் எடுத்து முத்திரை பதித்த இலங்கை!