டெஸ்ட், ஒரு நாள் போட்டி, டி20: ஆட்ட நாயகன் விருது வென்ற ஒரேயொரு பிளேயர் ஷ்ரேயாஸ் ஐயர்!

By Rsiva kumarFirst Published Jan 9, 2023, 6:07 PM IST
Highlights

கடந்த ஆண்டு நடந்த டி20, ஒரு நாள் மற்றும் டெஸ்ட் என்று எல்லாவற்றிலும் ஆட்ட நாயகன் வென்ற ஒரேயொரு வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

கடந்த 1994 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி மும்பையில் பிறந்த ஷ்ரேயாஸ் ஐயர், கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் தேதி இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூலம் டெஸ்ட் தொடரில் அறிமுகமானார். இதே போன்று கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 17 ஆம் தேதி இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டியின் மூலம் ஒரு நாள் தொடரில் அறிமுகமானார். அதே ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியின் மூலம் டி20 தொடரில் அறிமுகமானார்.

FIH Hockey World Cup 2023: ஒடிசாவில் இன்று ஹாக்கி உலக கோப்பை தொடக்க விழா..! விழாக்கோலம் பூண்ட கட்டாக்

வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியில் ஒரு நாள் தொடரிலும், டெஸ்ட் தொடரிலும் ஷ்ரேயாஸ் ஐயர் இடம் பெற்றிருந்தார். ஒரு நாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்த இந்திய அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. தற்போது இலங்கைக்கு எதிரான 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் இடம் பெற்றுள்ளார். டி20 தொடரில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது.

இலங்கை தொடரிலிருந்து கடைசி நேரத்தில் அதிரடியாக நீக்கப்பட்ட பும்ரா!

இந்த நிலையில், கடந்த ஆண்டு நடந்த டி20, ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டி என்று எல்லாவற்றிலும் ஆட்ட நாயகன் விருது ஷ்ரேயாஸ் ஐயர் வென்றுள்ளார். அதுமட்டுமின்றி, எல்லாவற்றிலும் ஆட்டநாயகன் விருது வென்ற ஒரேயொரு வீரர் இவர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் போட்டி நாளை நடைபெறவுள்ள நிலையில், நடந்து முடிந்த டி20 போட்டியில் அதிரடி காட்டிய சூர்யகுமார் யாதவ் இடம் பெறும் நிலையில், ஷ்ரேயாஸ் ஐயருக்கு இடம் கிடைக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இலங்கைக்கு எதிராக அதிக சிக்சர்கள் அடித்தவர்களில் 2ஆவது இடம் பிடித்த சூர்யகுமார் யாதவ்!

ஆண்டு வாரியாக ஒரு நாள் போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் அடித்த ரன்கள்:

2017 - 3 ஒரு நாள் போட்டி - 162 ரன்கள்
2018 - 2 ஒரு நாள் போட்டி - 48 ரன்கள்
2019 - 5 ஒரு நாள் போட்டி - 266 ரன்கள்
2020 - 9 ஒரு நாள் போட்டி - 331 ரன்கள்
2021 - 1 ஒரு நாள் போட்டி - 6 ரன்கள்
2022 - 15 ஒரு நாள் போட்டி - 724 ரன்கள்

இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கான இந்திய அணி:

ரோகித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), விராட் கோலி, இஷான் கிஷான், கே எல் ராகுல், சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், சுப்மன் கில், வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ், முகமது ஷமி, யுஸ்வேந்திர சகால், குல்தீப் யாதவ், அக்‌ஷர் படேல், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக்.

சூர்யகுமார் யாதவ் மற்றும் மனைவி டேவிஷா ஷெட்டியின் ஃபர்ஸ்ட் மீட்டிங் எப்போது தெரியுமா?

click me!