ஓடிகிட்டே இருந்த ஹெட்மயர்.. அப்படியே ஓடவிட்டு பழிதீர்த்த ஷ்ரேயாஸ் ஐயர்.. வீடியோ

By karthikeyan VFirst Published Dec 19, 2019, 12:54 PM IST
Highlights

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயரின் அபாரமான ஃபீல்டிங்கால், அபாயகரமான வீரர் விரைவில் களத்திலிருந்து வெளியேறினார். 

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டியில் இந்திய அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-1 என தொடரை சமன் செய்துள்ளது. 

விசாகப்பட்டினத்தில் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, ரோஹித் - ராகுல் அமைத்து கொடுத்த அபாரமான தொடக்கம் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் - ரிஷப் பண்ட்டின் அதிரடியான ஃபினிஷிங் ஆகியவற்றின் விளைவாக 50 ஓவரில் 387 ரன்களை குவித்தது. 

388 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 280 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, 107 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. பூரானும் ஹோப்பும் மட்டுமே வெஸ்ட் இண்டீஸ் அணியில் சிறப்பாக ஆடினர். அவர்கள் இருவரும் களத்தில் நின்றபோது, அதிலும் குறிப்பாக பூரான் தாறுமாறாக அடித்து கொண்டிருந்தபோது, இந்திய வீரர்கள் கலக்கமடைந்தனர். ஆனால் பூரானை 75 ரன்களில் 30 ஓவரில் வீழ்த்தி பிரேக் கொடுத்தார் ஷமி. அதன்பின்னர் தான் இந்திய அணி ஆட்டத்திற்குள் வந்தது. அதன்பின்னர் குல்தீப்பின் ஹாட்ரிக், ஷமி, ஜடேஜா ஆகியோர் தங்கள் பங்கிற்கு விக்கெட்டுகளை வீழ்த்த, அந்த அணி 280 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

முதல் போட்டியில் அபாரமாக ஆடி 139 ரன்களை குவித்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெற்றிக்கு காரணமாக திகழ்ந்த ஹெட்மயர், இந்த போட்டியில் 4 ரன்களில் வெளியேறினார். அதற்கு ஷ்ரேயாஸ் ஐயர் தான் காரணம். ஷ்ரேயாஸ் ஐயரின் அபாரமான ஃபீல்டிங்கால், ஹெட்மயர் ரன் அவுட்டானார். 

ஜடேஜா வீசிய 13வது ஓவரின் இரண்டாவது பந்தை ஹெட்மயர் கவர் திசையில் அடித்தார். பவுண்டரிக்கு வேகமாக ஓடிய அந்த பந்தை, அதைவிட வேகமாக ஓடிப்போய் பவுண்டரி லைனிற்கு முன்பாக மறைத்தார் ஷ்ரேயாஸ் ஐயர். இதற்கிடையே, அதற்கு ஹெட்மயரும் ஹோப்பும் 3 ரன்கள் ஓடினர். அவர்கள் மூன்றாவது ரன் ஓடிக்கொண்டிருந்தபோது, ஷ்ரேயாஸ் ஐயர், பவுலிங் முனை ஸ்டம்பிற்கு த்ரோ அடித்தார். அதை எந்தவித தவறும் செய்யாமல் பிடித்து தெளிவாக அடித்தார் ஜடேஜா. இதையடுத்து ஹெட்மயர் ரன் அவுட்டானார். அபாயகரமான ஹெட்மயரை ஷ்ரேயாஸ் ஐயர் தனது மிகச்சிறப்பான பீல்டிங்கின் மூலம் ரன் அவுட்டாக்கி அனுப்பினார். அந்த வீடியோ இதோ.. 

முதல் ஒருநாள் போட்டியில் ஹெட்மயரின் கேட்ச்சை ஷ்ரேயாஸ் ஐயர் கோட்டை விட்டார். ஷ்ரேயாஸ் ஐயர் கேட்ச் விடும் முன்பே அவர் சதமடித்துவிட்டார் என்றாலும் கூட, கேட்ச் விட்டபின்னர், சில சிக்ஸர்களை பறக்கவிட்டு விரைவில் ஸ்கோர் செய்தார். அந்த கேட்ச்சிற்கு, இந்த ரன் அவுட்டின் மூலம் பழிதீர்த்து கொண்ட ஷ்ரேயாஸ் ஐயர், அபாயகரமான ஹெட்மயரை விரைவில் பெவிலியனுக்கு அனுப்ப காரணமாக இருந்தார்.

click me!