கண்டதையும் திண்ணுட்டு இப்படி நோயை பரப்புறீங்களேடா.. சீனா மீது செம கடுப்பாகி சீனர்களை கழுவி ஊற்றிய அக்தர்

By karthikeyan VFirst Published Mar 15, 2020, 10:44 AM IST
Highlights

கொரோனா வைரஸை உலகம் முழுதும் பரப்பிய சீனர்களின் உணவுமுறையை கடுமையாக விமர்சித்துள்ளார், பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஃபாஸ்ட் பவுலர் ஷோயப் அக்தர். 
 

சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள வூஹான் நகரில் உருவான கொரோனா வைரஸ், தற்போது 100 நாடுகளுக்கும் மேல் வேகமாக பரவி சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேரை பாதித்துள்ளது. சீனா உட்பட உலகம் முழுதும் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 80க்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இருவர் உயிரிழந்துள்ளனர். 

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் சர்வதேசத்தையே அச்சுறுத்திவருகிறது. கொரோனா அச்சுறுத்தலால் சர்வதேச பொருளாதாரமே முடங்கியுள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் கிரிக்கெட் போட்டிகள் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதனால் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. 

இந்தியா - தென்னாப்பிரிக்கா தொடர் ரத்து செய்யப்பட்டது. ஆஸ்திரேலியா - நியூசிலாந்து தொடர் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஒருவேளை ஐபிஎல் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டால் பல்லாயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும். அதேபோல பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரை காண ரசிகர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்ற அறிவிப்பை கேட்டு, அதில் ஆடிவந்த வெளிநாட்டு வீரர்கள், அந்த தொடரில் ஆடாமல் தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்பிவிட்டனர். 

இப்படியாக உலக நாடுகளை கடும் சிக்கலுக்கு உள்ளாக்கிய சீனாவையும் சீனர்களையும் அக்தர் கடுமையாக சாடியுள்ளார். அவர்களது உணவு பழக்கவழக்கம்தான் இவ்வளவுக்கும் காரணம் என கடுமையாக விமர்சித்துள்ளார். 

இதுகுறித்து தனது யூடியூப் பக்கத்தில் பேசிய அக்தர், வௌவால், நாய், பூனை ஆகியவற்றை நீங்கள் எப்படித்தான் சாப்பிடுகிறீர்கள் என்பது எனக்கு புரியவில்லை. அவற்றை சாப்பிடுவது மட்டுமல்லாமல் அவற்றின் இரத்தம் மற்றும் சிறுநீரையும் குடிக்கிறீர்கள். ஆம்.. நான் சீனர்களை பற்றித்தான் பேசுகிறேன். சீனர்களால் உலகமே இப்போது கடும் சிக்கலில் சிக்கி தவிக்கிறது. எனக்கு உண்மையாகவே வௌவால், நாய், பூனை ஆகியவற்றை எப்படி சாப்பிடுகிறீர்கள் என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை. எனக்கு கடுமையாக கோபம் வருகிறது. 

நான் சீன மக்களுக்கு எதிரானவன் அல்ல. கண்டதையும் சாப்பிடுவது உங்களது கலாச்சாரமாக இருக்கலாம். ஆனால் அது உங்களுக்கு ஒருபோதும் நன்மை பயக்காது. சாப்பிடுவதில் ஒரு வரைமுறை வேண்டாமா? நீங்கள் நினைப்பதையெல்லாம் உங்களால் சாப்பிட்டுவிட முடியாது. உங்களால் உலகமே இப்போது கடும் சிக்கலில் இருக்கிறது. உலக பொருளாதாரமே பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது.

Also Read - எத்தனையோ ரன் அவுட் பார்த்துருப்பீங்க.. ஆனால் இது அதையெல்லாம் விட வித்தியாசமானது.. உனாத்கத் செம ஷார்ப்.. வீடியோ

நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்போதுதான் பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுகின்றன. பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் நன்றாக சென்றுகொண்டிருந்த நிலையில், கொரோனா பாதிப்பால் ரசிகர்கள் இல்லாமல் போட்டிகள் ஆடப்படும் என்ற அறிவிப்பை கேட்டு வெளிநாட்டு வீரர்கள் அவர்களது சொந்த நாடுகளுக்கு திரும்பிவிட்டனர். இதுதான் எனக்கு கடும் கோபத்துக்கு முக்கியமான காரணம். ஐபிஎல்லும் ஒத்திவைக்கப்பட்டதாக அறிந்தேன். உங்களால்(சீனர்கள்) சுற்றுலாத்துறை, போக்குவரத்துத்துறை, ஒளிபரப்புத்துறை என அனைத்துமே கடும் வீழ்ச்சியையும் இழப்பையும் சந்தித்துள்ளது என்று சீனர்களையும் அவர்களது உணவுமுறையையும் கடுமையாக விமர்சித்தார் அக்தர். 

click me!