உங்க காலத்துல யோ யோ டெஸ்ட் வச்சுருந்தா டாப் 3 இடத்தில் யார் தேர்ச்சி பெற்றிருப்பார்கள்? இர்ஃபான் பதான் அதிரடி

By karthikeyan VFirst Published Mar 14, 2020, 5:37 PM IST
Highlights

தான் ஆடிய காலத்தில் யோ யோ டெஸ்ட் நடத்தியிருந்தால் எந்த 3 வீரர்கள் ஃபிட்னெஸை நிரூபிப்பதில் டாப் 3 இடங்களை பிடித்திருப்பார்கள் என இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார். 

விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் ஃபிட்னெஸுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. தோனி கேப்டனாக இருந்தபோதே, ஃபிட்னெஸுக்கு முக்கியத்துவம் கொடுக்க தொடங்கினார். அதன்பின்னர் கோலி கேப்டனான பிறகு சற்று கூடுதலாக ஃபிட்னெஸுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. 

ஆனால் சச்சின், கங்குலி, டிராவிட், யுவராஜ் சிங், கைஃப், இர்ஃபான் பதான், ஜாகீர் கான் ஆகியோர் ஆடிய முந்தைய பத்தாண்டில் யோ யோ டெஸ்ட்டெல்லாம் கிடையாது. வீரர்கள் ஃபிட்னெஸுடன் தான் இருந்தார்கள். ஆனாலும் இப்போதைய இந்திய அணி அளவிற்கான ஃபிட்னெஸுடன் இல்லை. 

சமகால கிரிக்கெட்டில் ஃபிட்னெஸ் என்பது மிக முக்கியமாகிவிட்டது. அப்போதெல்லாம் திறமையான பேட்ஸ்மேனாக இருந்தால் மட்டும் போதும். ஆனால் இப்போது அப்படியில்லை, எவ்வளவு பெரிய பேட்ஸ்மேனாகவோ அல்லது பவுலராகவோ இருந்தாலும், ஃபிட்னெஸும் அவசியமாகிறது. எனவே யோ யோ டெஸ்ட்டின் மூலம் வீரர்களின் ஃபிட்னெஸ் பரிசோதிக்கப்படுகிறது. 

திறமையான வீரராக இருந்தாலும், யோ யோ டெஸ்ட்டில் தேறவில்லையென்றால், அணியில் இடம் கிடையாது என்ற சூழல் வந்துவிட்டது. யுவராஜ் சிங்கே இப்படித்தான் ஓரங்கட்டப்பட்டார். இந்நிலையில், நீங்கள் ஆடிய காலத்தில் யோ யோ டெஸ்ட் வைத்திருந்தால், டாப் 3 இடத்தை யார் யார் பிடித்திருப்பார்கள் என்று இர்ஃபான் பதானிடம், ஃபர்ஸ்ட் போஸ்ட் இணையதளத்திற்கு அளித்த பேட்டியின்போது கேள்வி எழுப்பப்பட்டது. 

தனது பெயரையும் அந்த மூவரில் ஒருவராக சேர்த்துக்கொண்ட இர்ஃபான் பதான், தன்னை தவிர சச்சின் டெண்டுல்கர் மற்றும் கைஃப் ஆகிய இருவரது பெயரையும் தெரிவித்தார். 
 

click me!