ஐபிஎல் 2020: அணி உரிமையாளர்களுடன் பிசிசிஐ அதிகாரிகள் ஆலோசனை.. அதிரடி முடிவு

By karthikeyan VFirst Published Mar 14, 2020, 3:34 PM IST
Highlights

கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில், ஐபிஎல்லை நடத்துவது குறித்து ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களுடன் பிசிசிஐ அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர். 
 

சீனாவில் உருவான கொரோனா வைரஸ், உலகம் முழுதும் வேகமாக பரவி, சர்வதேசத்தையே அச்சுறுத்திவருகிறது. சீனா, இத்தாலி, ஈரான் ஆகிய நாடுகளில் கொரோனாவின் வீச்சு அதிகமாக உள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துவருகிறது. இந்தியாவில் 88 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளாது. 

கொரோனா அச்சுறுத்தலால், மார்ச் 29ம் தேதி தொடங்கவிருந்த ஐபிஎல் தொடர், ஏப்ரல் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தியா - தென்னாப்பிரிக்கா தொடர் ரத்து செய்யப்பட்டு, தென்னாப்பிரிக்க வீரர்கள் திருப்பியனுப்பப்பட்டனர்.

மார்ச் 29ம் தேதி தொடங்கவிருந்த ஐபிஎல் தொடர், கொரோனா அச்சுறுத்தலால் ஏப்ரல் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் அன்றைக்கும் தொடங்குவது சந்தேகம் தான். ரசிகர்களை ஸ்டேடியத்திற்குள் அனுமதிக்காமல், வீரர்கள் மட்டும் போட்டியில் கலந்துகொண்டு ஆடுவதால் வீரர்கள் பாதிக்கப்பட்டால் பெரிய பிரச்னை. 

ஐபிஎல் நடத்தப்படவில்லை என்றால் பல்லாயிரம் கோடி வருவாய் பாதிக்கப்படும். ஆனால் பணத்தை விட, உயிரே முக்கியம் என்பதால், அதற்கேற்பத்தான் முடிவெடுக்கப்படும். 

Also Read - நமக்கு வேற சாய்ஸே இல்ல.. ஐபிஎல் குறித்து மௌனம் கலைத்த கங்குலி

ஐபிஎல்லை ஒத்திவைப்பதாக பிசிசிஐ நேற்று அறிவித்த நிலையில், இன்று ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களுடன் பிசிசிஐ ஆலோசனை நடத்தியது. இந்த கூட்டத்தில், வீரர்கள் மற்றும் ரசிகர்களின் பாதுகாப்புதான் முக்கியம் என்பதை ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் ஒப்புக்கொண்டதாகவும், கொரோனா பாதிப்பை ஆழமாக ஆராய்ந்து அதற்கேற்ப ஐபிஎல்லை நடத்துவது குறித்து பின்னர் விவாதித்து முடிவெடுக்கப்படும் என்றும் பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

click me!