நமக்கு வேற சாய்ஸே இல்ல.. ஐபிஎல் குறித்து மௌனம் கலைத்த கங்குலி

By karthikeyan VFirst Published Mar 14, 2020, 1:12 PM IST
Highlights

கொரோனாவின் அச்சுறுத்தல் தீவிரமாகிவரும் நிலையில், ஐபிஎல் குறித்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார்.
 

சீனாவில் உருவான கொரோனா வைரஸ், உலகம் முழுதும் வேகமாக பரவி, சர்வதேசத்தையே அச்சுறுத்திவருகிறது. சீனா, இத்தாலி, ஈரான் ஆகிய நாடுகளில் கொரோனாவின் வீச்சு அதிகமாக உள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துவருகிறது. இந்தியாவில் 88 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளாது. 

கொரோனா அச்சுறுத்தலால், மார்ச் 29ம் தேதி தொடங்கவிருந்த ஐபிஎல் தொடர், ஏப்ரல் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தியா - தென்னாப்பிரிக்கா தொடர் ரத்து செய்யப்பட்டு, தென்னாப்பிரிக்க வீரர்கள் திருப்பியனுப்பப்பட்டனர். 

ஐபிஎல்லின் மூலம் பிசிசிஐ சுமார் பத்தாயிரம் கோடி வருவாய் ஈட்டிவரும் நிலையில், கொரோனா அச்சுறுத்தலின் விளைவாக, இந்த ஆண்டு ஐபிஎல் நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ரசிகர்களை ஸ்டேடியத்திற்குள் அனுமதிக்காமல் நடத்த வேண்டும் என்று ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் சிலர் வலியுறுத்தியுள்ளனர். அதன்மூலம் ஐபிஎல்லை ஒளிபரப்புவதன்மூலம் கிடைக்கும் வருவாயாவது கிடைக்கும் என்று நினைக்கின்றனர். 

ஸ்டேடியத்தில் ரசிகர்களே இல்லாமல் களத்தில் வீரர்கள் மட்டும் இறங்கி ஆடினால்கூட, வீரர்களுக்கு தொற்று ஏற்பட்டால் என்ன செய்வது? எனவே ஐபிஎல் ஆடுவது ரிஸ்க் தான். இந்தியா - தென்னாப்பிரிக்கா தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளது, ஆஸ்திரேலியா - நியூசிலாந்து தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதேபோல பல்வேறு கிரிக்கெட் தொடர்கள் ரத்து செய்யப்பட்டும், ஒத்திவைக்கப்பட்டும் வருகின்றன.

ஐபிஎல்லை தற்போதைக்கு, மார்ச் 29ம் தேதியிலிருந்து ஏப்ரல் 15ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது பிசிசிஐ. ஆனால் அன்றைக்கும் தொடங்குவது சந்தேகம் தான். உயிரை பணயம் வைத்து ஆட வேண்டிய அவசியம் இல்லை என்பதும் பல முன்னாள், இந்நாள் வீரர்களின் கருத்தாக உள்ளது. அது அவர்களின் கருத்து மட்டுமல்ல; பொதுவான கருத்தும் கூட அதுவே. 

வேறு வழியே இல்லாமல் ஐபிஎல் இப்போதைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து பேசிய பிசிசிஐ தலைவர் கங்குலி, இப்போதைக்கு ஐபிஎல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பாக இருப்பதுதான் நமக்கு முக்கியம். எனவே இப்போதைக்கு ஐபிஎல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம். அதனால் ஐபிஎல் நடத்துவது குறித்து இப்போதே திட்டவட்டமாக பதில் சொல்லமுடியாது என்று கூறினார். 

Also Read - பிசிசிஐ வர்ணனையாளர் குழுவிலிருந்து தூக்கியெறியப்பட்ட சஞ்சய்(சர்ச்சை) மஞ்சரேக்கர்

இந்த முடிவு ஐபிஎல் அணிகளுக்கு மகிழ்ச்சியளிக்கிறதா என்ற கேள்விக்கு, நமக்கு வேற சாய்ஸே இல்லை என்று தெரிவித்தார். எனவே கட்டாயத்தின் பெயரில் ஐபிஎல் தற்போதைக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையில், ஐபிஎல் நடத்தப்படுவது சந்தேகம் தான்.
 

click me!