அவரை ஏன்டா டீம்ல எடுக்கல..? அக்தர் கடுங்கோபம்

Published : Mar 15, 2021, 05:24 PM IST
அவரை ஏன்டா டீம்ல எடுக்கல..? அக்தர் கடுங்கோபம்

சுருக்கம்

இமாத் வாசிமை பாகிஸ்தான் அணியில் எடுக்காதது குறித்து முன்னாள் வீரர் ஷோயப் அக்தர் கேள்வியெழுப்பியுள்ளார்.  

பாகிஸ்தான் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 4 டி20 போட்டிகளில் ஆடுகிறது. அதன்பின்னர் அப்படியே ஜிம்பாப்வே சென்று 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும் ஆடுகிறது.

இந்த சுற்றுப்பயணங்களுக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டது. டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் என எந்தவிதமான அணியிலுமே ஸ்பின் ஆல்ரவுண்டர் இமாத் வாசிம் இல்லை.

டி20 அணி:

பாபர் அசாம்(கேப்டன்), ஷதாப் கான், ஷர்ஜீல் கான், முகமது ஹஃபீஸ், ஹைதர் அலி, டனிஷ் அஜீஸ், ஆசிஃப் அலி, முகமது நவாஸ், ஃபஹீம் அஷ்ரஃப், முகமது வாசிம், முகமது ரிஸ்வான், சர்ஃபராஸ் அகமது, ஷாஹீன் அஃப்ரிடி, ஹாரிஸ் ராஃப், முகமது ஹஸ்னைன், ஹசன் அலி, அர்ஷத் இக்பால், உஸ்மான் காதிர்.

ஒருநாள் அணி:

பாபர் அசாம்(கேப்டன்), இமாம் உல் ஹக், ஃபகார் ஜமான், அப்துல்லா ஷாஃபிக், ஹைதர் அலி, டானிஷ் அஜீஸ், சௌத் ஷகீல், ஃபஹீம் அஷ்ரஃப், முகமது வாசிம், ஷதாப் கான், முகமது நவாஸ், முகமது ரிஸ்வான் சர்ஃபராஸ் அகமது, ஷாஹீன் அஃப்ரிடி, ஹாரிஸ் ரௌஃப், ஹஸ்னைன், ஹசன் அலி, உஸ்மான் காதிர்.

மிகச்சிறந்த ஸ்பின் ஆல்ரவுண்டரும் பாகிஸ்தானுக்காக நிறைய வெற்றிகளை பெற்று கொடுத்திருப்பவருமான இமாத் வாசிம் எந்தவிதமான பாகிஸ்தான் அணியிலும் எடுக்கப்படவில்லை. அவருக்கு பதிலாக முகமது நவாஸ் எடுக்கப்பட்டுள்ளாது.

இமாத் வாசிமை எடுக்காததால் அதிருப்தியடைந்த அக்தர், இமாத் வாசிமை அணியிலிருந்து ஓரங்கட்டுவதற்கு எந்தவிதமான காரணமும் இல்லை. அவரை ஏன் அணியிலிருந்து ஓரங்கட்டினீர்கள் என்று அக்தர் கேள்வியெழுப்பியுள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

மிட்ச்செல், பிலிப்ஸ் ருத்ரதாண்டவம்.. இந்திய பவுலர்களை தண்ணி குடிக்க வைத்த நியூசிலாந்து! மெகா சாதனை!
IND vs NZ: ஆல்ரவுண்டருக்கு மீண்டும் சான்ஸ்.. ருத்ராஜை விட இவர் திறமைசாலியா? விளாசும் நெட்டிசன்கள்!