மூளையில்லா முட்டாள் கேப்டன் சர்ஃபராஸ்.. மானாவாரியா திட்டி தீர்த்த ஷோயப் அக்தர்

By karthikeyan VFirst Published Jun 17, 2019, 2:52 PM IST
Highlights

பாகிஸ்தான் கேப்டன் சர்ஃபராஸ் அகமதுவை மூளையில்லாத கேப்டன் என ஷோயப் அக்தர் கடுமையாக விமர்சித்துள்ளார். 

உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள இரு அணிகளாக கருதப்படும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியை விட, ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட போட்டி இந்தியா - பாகிஸ்தான் போட்டி தான். 

ஆனால் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி பரபரப்பே இல்லாமல் ஒருதலைபட்சமான போட்டியாகவே முடிந்துவிட்டது. 337 ரன்களை குவித்த இந்திய அணி, வெறும் 212 ரன்களுக்கு சுருட்டி டி.எல்.எஸ் முறைப்படி 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்க கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணியை எதிர்கொண்ட பாகிஸ்தான் அணி, பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலுமே சொதப்பி தோல்வியை தழுவியது. 

டாஸ் வென்றால் பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் ஆட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். ஆடுகளம் ஈரப்பதமாக இருந்தால் பவுலிங் தேர்வு செய்யலாம். இல்லையென்றால், டாஸ் வென்றால் முதலில் பேட்டிங் தான் ஆட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். 

இம்ரான் கான் பிரதமர் மட்டுமல்ல; பாகிஸ்தான் அணிக்கு 1992ல் உலக கோப்பையை வென்று கொடுத்த கேப்டன். அவர் சிறந்த ஆல்ரவுண்டர். உலக கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் என்பதற்காகவோ பாகிஸ்தானின் பிரதமர் என்பதற்காகவோ அவரது பேச்சை அப்படியே கேப்டன் கேட்கவேண்டும் என்பதில்லை. அணி சார்பில் திட்டங்கள் இருக்கும். ஆனாலும் கூட நல்ல பயனுள்ள ஆலோசனைக்கு செவி மடுத்திருக்கலாம். 

ஏனெனில் 2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியில் இந்திய அணியை வீழ்த்தியபோது கூட பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் தான் ஆடியது. அப்போது டாஸ் வென்ற இந்திய கேப்டன் கோலி, பாகிஸ்தானை முதலில் பேட்டிங் ஆட பணித்தார். அதுதான் தவறான முடிவாகிப்போனது. அதேபோல அதே தவறை இந்த போட்டியில் சர்ஃபராஸ் செய்தார். முதல் பேட்டிங் ஆடியிருந்தால் மட்டும் பாகிஸ்தான் ஜெயித்திருக்கும் என்று அர்த்தமில்லை. ஆனால் படுமோசமாக தோற்றிருக்காது. இந்திய அணிக்கு ஒருவேளை நெருக்கடி கொடுத்திருக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் இந்திய அணியை முதலில் பேட்டிங் ஆடவிட்டதால், போட்டி தொடங்கிய கொஞ்ச நேரத்திலேயே ரிசல்ட் தெரிந்துவிட்டது.

இந்நிலையில், சர்ஃபராஸ் அகமது டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்ததற்காக அவரை ஷோயப் அக்தர் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த அக்தர், சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியில் இந்திய அணி செய்த அதே தவறை இந்த முறை பாகிஸ்தான் அணி செய்தது. சர்ஃபராஸ் அகமது எப்படி இந்தளவிற்கு மூளையில்லாமல் இருக்கிறார் என்பதை புரிந்துகொள்ளவே முடியவில்லை. நமது அணிக்கு சேஸிங் சரியா வராது என்பதைக்கூட புரிந்து வைத்திருக்காமல் பவுலிங் தேர்வு செய்தார். அணியின் பலத்தை ஒரு கேப்டன் அறிந்து வைத்திருக்க வேண்டும். டாஸ் வென்ற பொழுதே பாகிஸ்தான் அணி போட்டியில் பாதி ஜெயித்துவிட்டது. முதலில் பேட்டிங் ஆடி 260 ரன்கள் அடித்திருந்தாலே இந்திய அணிக்கு நெருக்கடி கொடுத்திருக்க முடியும். ஆனால் பவுலிங்கை தேர்வு செய்தார். சர்ஃபராஸ் அகமதுவின் மூளையில்லாத முட்டாள்தனமான கேப்டன்சி இது என்று அக்தர் கடுமையாக விமர்சித்துள்ளார். 
 

click me!