பர்கர திண்ணுட்டு களத்துக்கு போனா இப்படி கொட்டாவி விட வேண்டியதுதான்.. சர்ஃபராஸை சரமாரியா தெறிக்கவிடும் பாகிஸ்தான் ரசிகர்கள்

Published : Jun 17, 2019, 01:27 PM ISTUpdated : Jun 17, 2019, 01:29 PM IST
பர்கர திண்ணுட்டு களத்துக்கு போனா இப்படி கொட்டாவி விட வேண்டியதுதான்..  சர்ஃபராஸை சரமாரியா தெறிக்கவிடும் பாகிஸ்தான் ரசிகர்கள்

சுருக்கம்

வீரர்கள் தங்களது உடற்தகுதியிலும் ஃபிட்னெஸிலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 

உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி படுமோசமாக ஆடிவருகிறது. முதல் நான்கு போட்டிகளில் இரண்டு தோல்வி, ஒரு வெற்றியுடன் 3 புள்ளிகளை பெற்றிருந்த பாகிஸ்தான் அணி, இந்திய அணிக்கு எதிராக படுதோல்வி அடைந்தது. 

5 போட்டிகளில் ஆடி வெறும் 3 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ள பாகிஸ்தான் அணிக்கு இன்னும் 4 போட்டிகள் மட்டுமே எஞ்சியுள்ளன. எனவே அந்த அணி அரையிறுதிக்கு கண்டிப்பாக முன்னேற முடியாது. அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்க கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணியை எதிர்கொண்ட பாகிஸ்தான் அணி, பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலுமே சொதப்பி தோல்வியை தழுவியது. 

இந்நிலையில், பாகிஸ்தான் அணி வீரர்களை நெட்டிசன்கள் கழுவி கழுவி ஊற்றிவருகின்றனர். போட்டிக்கு முந்தைய நாள் இரவு பாகிஸ்தான் வீரர்கள் பர்கர் சாப்பிட்டதாகவும், அதிலும் கேப்டன் சர்ஃபராஸ் அகமது 4 பர்கர்களை சாப்பிட்டதாகவும், அதுதான் ஆட்டத்திலும் எதிரொலித்ததாக கிண்டலடித்துள்ளனர். அதற்கேற்ற வகையில், இந்திய அணியின் இன்னிங்ஸுக்கு இடையே கேப்டனும் விக்கெட் கீப்பருமான சர்ஃபராஸ் அகமது, கொட்டாவி ஒன்றை விட்டார். களத்தில் நின்றுகொண்டு கேப்டனே கொட்டாவி விட்டால் மற்ற வீரர்களுக்கு என்ன ஸ்பிரிட் இருக்கும்..? 

வீரர்கள் தங்களது உடற்தகுதியிலும் ஃபிட்னெஸிலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அப்படியிருந்தால் தான் களத்தில் சிறப்பாக ஃபீல்டிங் செய்ய முடியும். பொதுவாகவே ஃபீல்டிங்கில் மொக்கையான பாகிஸ்தான் அணி, நேற்றைய போட்டியில் மேலும் சொதப்பியது. இந்நிலையில், பாகிஸ்தான் வீரர்கள் சமூக வலைதளங்களில் கிண்டலடிக்கப்படுகின்றனர்.

பாகிஸ்தான் கேப்டன் சர்ஃபராஸின் ஃபிட்னெஸை ஷோயப் அக்தர் ஏற்கனவே கடுமையாக சாடியிருந்தது குறிப்பிடத்தக்கது. 
 

PREV
click me!

Recommended Stories

வைபவ் சூர்யவன்ஷி ருத்ரதாண்டவம்.. மின்னல் வேக சதம்.. 433 ரன்கள் குவிப்பு.. பிரமிக்க வைத்த இந்தியா!
IND VS SA 3வது டி20.. சுப்மன் கில் அதிரடி நீக்கம்?.. சிஎஸ்கே வீரர் கம்பேக்.. பிளேயிங் லெவன் இதோ!