அதெல்லாம் எங்களுக்கு ஒரு பிரச்னையே இல்ல.. அடுத்த 3 போட்டிகளில் இந்திய அணியில் அதிரடி மாற்றம் - கேப்டன் கோலி

By karthikeyan VFirst Published Jun 17, 2019, 12:31 PM IST
Highlights

இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் பேட்டிங்கின்போது தனது மூன்றாவது ஓவரை வீசிய புவனேஷ்வர் குமார், பந்துவீசிவிட்டு லேண்ட் ஆகும்போது ஸ்லிப் ஆனதால் காலில் சிறு காயம் ஏற்பட்டது. அதனால் பெவிலியன் திரும்பிய புவனேஷ்வர் குமார், அதன்பின்னர் பந்துவீசவில்லை. விஜய் சங்கர் அவருக்கு பதிலாக பந்துவீசினார். 

உலக கோப்பை தொடரின் நேற்றைய போட்டியில் டி.எல்.எஸ் முறைப்படி பாகிஸ்தான் அணியை 89 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித்தும் ராகுலும் அபாரமாக ஆடினர். ராகுல் அரைசதம் அடித்து அவுட்டானார். ஆனால் ரோஹித் சர்மா வழக்கம்போல தனது இன்னிங்ஸை பெரிதாக மாற்றினார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 24வது சதத்தை அடித்த ரோஹித், 140 ரன்கள் குவித்தார். ரோஹித், கோலி, ராகுல் ஆகியோரின் சிறப்பான பேட்டிங்கால் இந்திய அணி 336 ரன்களை குவித்தது. 

337 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய பாகிஸ்தான் அணி, 40 ஓவர் முடிவில் 212 ரன்களை எடுத்து டி.எல்.எஸ் முறைப்படி 89 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 

இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் பேட்டிங்கின்போது தனது மூன்றாவது ஓவரை வீசிய புவனேஷ்வர் குமார், பந்துவீசிவிட்டு லேண்ட் ஆகும்போது ஸ்லிப் ஆனதால் காலில் சிறு காயம் ஏற்பட்டது. அதனால் பெவிலியன் திரும்பிய புவனேஷ்வர் குமார், அதன்பின்னர் பந்துவீசவில்லை. விஜய் சங்கர் அவருக்கு பதிலாக பந்துவீசினார். புவனேஷ் இல்லாததால் விஜய் சங்கருக்கு சில ஓவர்கள் வீச வாய்ப்பு கிடைத்தது. 

ஏற்கனவே தவான் காயத்தால் சில போட்டிகளில் இருந்து விலகியிருக்கும் நிலையில், புவனேஷ்வர் குமாரின் காயம் குறித்த அப்டேட்டை தெரிந்துகொள்ள ரசிகர்கள் காத்திருந்த நிலையில் போட்டிக்கு பின்னர் கேப்டன் கோலி, புவனேஷ்வர் குமாரின் காயம் குறித்த அப்டேட்டை வழங்கினார். 

இதுகுறித்து பேசிய கோலி, புவனேஷ்வர் குமாருக்கு பெரிய காயம் கிடையாது. எனினும் முன்னெச்சரிக்கையாக அவர் முழு உடற்தகுதியை பெற வேண்டும் என்பதால், அதிகபட்சம் அடுத்த 3 போட்டிகளில் அவர் ஆடமாட்டார். ஷமி இருப்பதால், புவனேஷ்வர் குமார் இல்லாதது எங்களுக்கு ஒரு விஷயமே கிடையாது என்று கோலி தெரிவித்தார். 
 

click me!