பாபர் அசாமை தூக்கிட்டு பாகிஸ்தான் அணியின் கேப்டனாக அவரை நியமிக்கணும்..! அக்தர் அதிரடி

By karthikeyan VFirst Published Jul 11, 2021, 9:08 PM IST
Highlights

பாகிஸ்தான் ஒருநாள் அணி கேப்டனாக இருக்கும் பாபர் அசாமை நீக்கிவிட்டு ஹசன் அலியை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று முன்னாள் ஃபாஸ்ட் பவுலர் ஷோயப் அக்தர் தெரிவித்துள்ளார்.
 

சர்வதேச கிரிக்கெட்டில் டாப் அணிகளில் ஒன்றாக திகழ்ந்த பாகிஸ்தான் அணி, இம்ரான் கான் கேப்டன்சியில் 1992ல் உலக கோப்பையையும் வென்றது. மிகச்சிறந்த அணியாக திகழ்ந்த பாகிஸ்தான், 2017 சாம்பியன்ஸ் டிராபி ஃபைனலில் கூட இந்திய அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது.

வெற்றி - தோல்விகளுக்கு அப்பாற்பட்டு சிறந்த கிரிக்கெட்டை ஆடும் அணியாக திகழ்ந்த பாகிஸ்தான், இப்போது மிக மோசமாக ஆடிவருகிறது. அண்மைக்காலமாக அந்த அணியின் செயல்பாடு மோசமாக உள்ளது. இங்கிலாந்துக்கு எதிராக நடந்துவரும் தொடரில், முதல் 2 ஒருநாள் போட்டிகளிலும், அனுபவமற்ற வீரர்களை கொண்ட இங்கிலாந்து அணியிடம் படுதோல்வி அடைந்தது.

முதல் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்த பாகிஸ்தான், 2வது போட்டியில் 56 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. பாகிஸ்தான் ஆடுவதை பார்த்து விரக்தியும் வெறுப்பும் அடைந்த ஷோயப் அக்தர், அந்த அணியை மிகக்கடுமையாக விமர்சித்ததுடன், கேப்டனை மாற்ற வேண்டும் என்று ஆலோசனை கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள அக்தர், பாபர் அசாமை வெறும் பேட்ஸ்மேனாக மட்டுமே அணியில் ஆடவைக்க வேண்டும். வேறு கேப்டனை நியமிக்க வேண்டுமென்றால், என்னுடைய தேர்வு ஹசன் அலி. அவரிடம் ஸ்பார்க் மற்றும் புத்திக்கூர்மை ஆகிய இரண்டுமே உள்ளது. பாபர் அசாமை வெறும் பேட்ஸ்மேனாக மட்டுமே ஆடவைத்தால், கேப்டன்சி அழுத்தம் இருக்காது. அவரைச்சுற்றி பாகிஸ்தான் அணியின் பேட்டிங் அமையும். அது அணிக்கு நல்லது என்றார் அக்தர். 
 

click me!