ஒரு விக்கெட், 60 ரன்கள் (நாட் அவுட்) – ரோகித் சர்மாவே பாராட்டிட்டாரு, இனி ஹர்திக் பாண்டியாவுக்கு ஆப்பு தான்!

By Rsiva kumar  |  First Published Jan 12, 2024, 11:23 AM IST

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஷிவம் துபே ஒரு விக்கெட் கைப்பற்றியதோடு 60 ரன்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கும் முக்கிய காரணமாக அமைந்தார்.


இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நேற்று நடந்தது. இதில், முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் 158 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக முகமது நபி 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். சுப்மன் கில் மற்றும் ஜித்தேஷ் சர்மா ஓரளவு ரன்கள் சேர்த்தனர். இதையடுத்து களமிறங்கிய ஷிவம் துபே 40 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். மேலும், சிறப்பாக விளையாடிய ஷிவம் துபேவை, கேப்டன் ரோகித் சர்மா மனதார பாராட்டியுள்ளார்.

Rohit Sharma: டி20 கிரிக்கெட்டில் 100 வெற்றி – முதல் வீரராக ரோகித் சர்மா வரலாற்று சாதனை!

Tap to resize

Latest Videos

கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் 3 ஆம் தேதி வங்கதேச அணிக்கு எதிரான டி20 போட்டியின் மூலமாக டி20 கிரிக்கெட்டில் அறிமுகமானார். அதன் பிறகு நேற்றைய போட்டி உள்பட மொத்தமாக 16 டி20 போட்டிகளில் இடம் பெற்று விளையாடியுள்ளார். இதில், 2 முறை அரைசதம் அடித்துள்ளார். மேலும், 6 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.

இந்த நிலையில், தான் நேற்றைய போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலமாக ஆட்டநாயகன் விருது வென்றார். இதன் மூலமாக ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா இடத்திற்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சிறந்து விளங்கும் ஹர்திக் பாண்டியா இந்திய அணியில் 6 ஆவது இடத்தில் களமிறங்கி விளையாடுவார்.

14 மாதங்களுக்கு பிறகு ரிட்டர்ன் – ஓடி வந்து ரன் அவுட்டான ரோகித் சர்மா, வேடிக்கை பார்த்த கில் – என்ன நடந்தது?

தற்போது இந்த இடத்திற்கு ஷிவம் துபே தயாராகி வருகிறார். இவருக்கு அடுத்து ரிங்கு சிங் வேறு அணியில் இடம் பெற்றிருக்கிறார். வரும் ஜூன் 1 ஆம் தேதி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்க நிலையில் அதற்கு தயாராகும் வகையில் இந்திய அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு அவர்களது திறமை சோதனை செய்யப்படுகிறது. ஆனால், கடைசி வரை அணியில் மட்டுமே இடம் பெற்று பெஞ்சில் அமர வைக்கப்படும் சஞ்சு சாம்சனுக்கு பிளேயிங் 11ல் வாய்ப்பு மறுக்கப்படுகிறது. தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 3ஆவது ஒருநாள் கிரிக்கெட்டில் சதம் விளாசி அசத்தியிருந்தார்.

Rohit Sharma Run Out: ஏமாந்த ரோகித் சர்மா – கச்சிதமாக முடித்துக் கொடுத்த ஆள் இன் ஆள் அழகுராஜா ஷிவம் துபே!

இந்த நிலையில் அவருக்கு டி20 கிரிக்கெட்டில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஷ்ரேயாஸ் ஐயர் ரஞ்சி டிராபி விளையாட சென்றுவிட்டார். ஷிவம் துபே அணியில் இடம் பெற்றதற்கு முக்கிய காரணமே ரோகித் சர்மா தான் என்று சொல்லப்படுகிறது. மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடர் மூலமாக 14 மாதங்களுக்கு பிறகு அணிக்கு திரும்பினார்.

கடைசில பயம் காட்டிய நபி, அசால்ட்டா தூக்கிய முகேஷ் குமார் – ஆப்கானிஸ்தான் 158 ரன்கள் குவிப்பு!

ஹர்திக் பாண்டியாவிற்கு ஆப்பு வைக்கும் நோக்கத்தில் ஆல்ரவுண்டரான ஷிவம் துபேவை அணியில் இடம் பெறச் செய்தார். அதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட ஷிவம் துபே ஒரு விக்கெட் எடுத்ததோடு மட்டுமின்றி 60 ரன்களும் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!