வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி.. இந்திய அணியில் இளம் வீரர் அறிமுகம்

By karthikeyan VFirst Published Dec 15, 2019, 2:06 PM IST
Highlights

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் இளம் வீரர் அறிமுகமாகியுள்ளார். 
 

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. 

இதையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித்தும் ராகுலும் களமிறங்கினர். இந்த போட்டியில் இளம் வீரர் ஷிவம் துபே இந்திய அணியில் அறிமுகமாகியுள்ளார். டி20 தொடரில் இரண்டாவது போட்டியில் மட்டும் பேட்டிங் ஆட வாய்ப்பு கிடைத்த ஷிவம் துபே, அறிமுக இன்னிங்ஸிலேயே அபாரமாக ஆடி அரைசதம் அடித்து அசத்தினார். பவுலிங்கிலும் டீசண்ட்டாக செயல்பட்டார். 

எனவே அவருக்கு ஒருநாள் அணியிலும் வாய்ப்பு கிடைத்துள்ளது. தவானுக்கு பதிலாக அணியில் இணைந்த மயன்க் அகர்வாலுக்கும் ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இது தெரிந்ததுதான். ஏனெனில் தவான் இல்லையென்றால், ராகுலுக்குத்தான் தொடக்க வீரராக இறங்குவதில் முன்னுரிமை. அதுமட்டுமல்லாமல் அவர் நல்ல ஃபார்மில் இருப்பதால், அவர் தான் ரோஹித்துடன் ராகுல் தொடக்க வீரராக இறங்கினார். ஆனால் அவர் 6 ரன்களில் அவுட்டாகிவிட்டார்.. 

மேலும் ஸ்பின்னர்களாக ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் எடுக்கப்பட்டுள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் அணியின் பேட்டிங் ஆர்டரில் நிறைய இடது கை பேட்ஸ்மேன்கள் இருப்பதால் வலது கை ரிஸ்ட் ஸ்பின்னரான சாஹலுக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு இருக்காது என்பது தெரிந்ததுதான். அதேபோலவே சாஹலுக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. 

ஃபாஸ்ட் பவுலர்களாக தீபக் சாஹர் மற்றும் ஷமி ஆடுகின்றனர். புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக அணியில் இணைந்த ஷர்துல் தாகூருக்கு அணியில் இடமில்லை. மனீஷ் பாண்டேவும் பென்ச்சில் உட்கார வைக்கப்பட்டுள்ளார். கேதர் ஜாதவ் ஸ்பின் பவுலிங் வீசுவார் என்பதால் ஆல்ரவுண்டர் என்பதால், கூடுதலாக ஒரு பவுலிங் ஆப்சன் கிடைக்கும் என்பதன் அடிப்படையில் அவருக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது. 

இந்திய அணி:

ரோஹித் சர்மா, ராகுல், கோலி(கேப்டன்), ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ஷிவம் துபே, கேதர் ஜாதவ், ஜடேஜா, குல்தீப் யாதவ், தீபக் சாஹர், ஷமி. 
 

click me!