ஐபிஎல் ஏலத்தில் டெல்லி கேபிடள்ஸ் டார்கெட் செய்யும் வீரர்கள்.. ஓபனா சொன்ன ரிக்கி பாண்டிங்.. இதுக்கு பெயர்தான் தில்லு

By karthikeyan VFirst Published Dec 15, 2019, 1:05 PM IST
Highlights

ஐபிஎல்லில் 12 சீசன்கள் நடந்துமுடிந்துள்ளன. அதில், இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வென்றிராத மூன்று அணிகளில் டெல்லி கேபிடள்ஸும் ஒன்று. 
 

டெல்லி கேபிடள்ஸ் அணி முதல்முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில், முன்னாள் லெஜண்ட் கேப்டனும் பேட்ஸ்மேனுமான ரிக்கி பாண்டிங்கை தலைமை பயிற்சியாளராக நியமித்து செயல்பட்டுவருகிறது. கடந்த பல ஆண்டுகளாக பிளே ஆஃபிற்கு கூட தகுதிபெறாத டெல்லி அணி, ரிக்கி பாண்டிங் தலைமை பயிற்சியாளரானதும், கடந்த சீசனில் பிளே ஆஃப் வரை சென்று, பிளே ஆஃபில் சிஎஸ்கே என்ற வலுவான அணியிடம் தோற்று வெளியேறியது. 

ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில் பிரித்வி ஷா, ரிஷப் பண்ட் என இளம் வீரர்கள் நிறைந்த அணியில், அடுத்த சீசனில் அனுபவத்தையும் சேர்த்துள்ளார் பாண்டிங். ரஹானே, அஷ்வின் ஆகிய அனுபவ வீரர்களை மற்ற அணிகளிடமிருந்து வாங்கியுள்ளது டெல்லி அணி. 

2020ல் நடக்கவுள்ள ஐபிஎல் 13வது சீசனுக்கான ஏலம் வரும் 19ம் தேதி நடக்கவுள்ளது. அதற்கு முன்னதாக அனைத்து அணிகளும் பரஸ்பர புரிதலின் பேரில் வீரர்களை பரிமாற்றம் செய்துகொண்டனர். மேலும் தங்களுக்கு தேவையான வீரர்களை தக்கவைத்துக்கொண்டு தேவையில்லாத வீரர்களை கழட்டிவிட்டனர். வீரர்கள் பரிமாற்றத்தில் ரஹானே மற்றும் அஷ்வின் ஆகிய இருவரையும் டெல்லி அணி வாங்கியது. 

இந்நிலையில், முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் இருக்கும் டெல்லி கேபிடள்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங், ஐபிஎல் ஏலத்தில் டெல்லி அணி டார்கெட் செய்யும் வீரர்களை மறைமுகமாக தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசியுள்ள ரிக்கி பாண்டிங், எங்கள் அணியில் ரஹானே, ஷிகர் தவான், பிரித்வி ஷா என மூன்று தொடக்க வீரர்கள் இருக்கிறார்கள். எனவே பேட்டிங் ஆர்டரை பற்றி கவலைப்பட தேவையில்லை. வெளிநாட்டு ஃபாஸ்ட் பவுலர்களை எடுப்பதில் கவனம் செலுத்துகிறோம். பாட் கம்மின்ஸ், கிறிஸ் வோக்ஸ் போன்ற வீரர்கள் அதிகமான விலைக்கு ஏலம் போவார்கள். நான் எப்போதுமே ஆல்ரவுண்டர்கள் மீது ஆர்வம் கொண்டவன். மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மிட்செல் மார்ஷ், ஜிம்மி நீஷம், கோலின் டி கிராண்ட் ஹோம் ஆகிய வீரர்கள் அதிகமான விலைக்கு ஏலம் போக வாய்ப்பிருப்பதாக பாண்டிங் தெரிவித்தார். 

தனக்கு ஆல்ரவுண்டர்கள் மீது எப்போதுமே ஆர்வமிருப்பதாக தெரிவித்திருப்பதன் மூலம், அவர் குறிப்பிட்டுள்ள ஆல்ரவுண்டர்களை எடுப்பதில் டெல்லி அணி ஆர்வம் காட்டும் என்பது தெரிகிறது. 
 

click me!