ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்து அதே சர்ச்சையில் சிக்கிய தவான்.. பிசிசிஐ அதிரடி நடவடிக்கை..?

By karthikeyan VFirst Published Mar 5, 2020, 11:58 AM IST
Highlights

ஹர்திக் பாண்டியாவை தொடர்ந்து அதே சர்ச்சையில் சிக்கியுள்ளார் ஷிகர் தவான். 
 

ஹர்திக் பாண்டியா, தவான், புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர் ஆகியோர் காயம் காரணமாக நியூசிலாந்து தொடரில் ஆடவில்லை. காயத்திலிருந்து மீண்ட இவர்கள் டிஒய் பாட்டீல் டி20 தொடரில் ஆடிவருகின்றனர். 

ஹர்திக் பாண்டியா, தவான் ஆகியோர் ரிலையன்ஸ் ஒன் அணிக்காக ஆடிவருகின்றனர். சிஏஜி அணிக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்டியா 37 பந்தில் சதமடித்து அசத்தினார். இந்த தொடரில் ஆடிவரும் ஹர்திக் பாண்டியாவும் தவானும் சர்ச்சையில் சிக்கியுள்ளனர். 

உள்நாட்டு போட்டிகளில் ஆடும்போது, பிசிசிஐ லோகோவை வீரர்கள் பயன்படுத்தக்கூடாது என்பது பிசிசிஐ விதி. அதனால் தான் உள்நாட்டு போட்டிகளில் ஆடும்போது, பிசிசிஐ லோகோ ஹெல்மெட்டில் இடம்பெற்றிருந்தால், அதை மறைத்துவிட்டு வீரர்கள் ஆடுவார்கள். ஆனால் டிஒய் பாட்டீல் தொடரில் ஹர்திக் பாண்டியா பிசிசிஐ லோகோ அடங்கிய ஹெல்மெட்டுடன் ஆடிய நிலையில், தவானும் அதே தவறை செய்துள்ளார். 

Also Read - மகளிர் டி20 உலக கோப்பை: முதல் முறையாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய அணி

டிஒய் பாட்டீல் ஏ அணிக்கு எதிரான போட்டியில் ஆடிய தவான், பிசிசிஐ லோகோ இடம்பெற்ற ஹெல்மெட்டுடன் ஆடினார். இது பிசிசிஐ விதிப்படி குற்றம் என்பதால், விதியை மீறிய தவான் மற்றும் ஹர்திக் பாண்டியா மீது நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புள்ளது. 

Also Read - இந்திய அணியின் புதிய தேர்வுக்குழு தலைவர் அறிவிப்பு.. தாதாவின் கேப்டன்சியில் அசத்திய வீரர் தேர்வு
 

click me!