மகளிர் டி20 உலக கோப்பை: முதல் முறையாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய அணி

By karthikeyan VFirst Published Mar 5, 2020, 11:18 AM IST
Highlights

மகளிர் டி20 உலக கோப்பையின் இறுதி போட்டிக்கு முதன்முறையாக இந்திய அணி தகுதி பெற்றுள்ளது. 
 

மகளிர் டி20 உலக கோப்பை ஆஸ்திரேலியாவில் நடந்துவருகிறது. இந்த உலக கோப்பையில் இந்திய அணி மிகச்சிறப்பாக ஆடி லீக் சுற்றின் நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்று முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது. 

ஏ பிரிவில் இருந்து இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளும், பி பிரிவில் இருந்து தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறின. 

லீக் சுற்றின் முடிவில் ஏ பிரிவில் முதலிடத்தை பிடித்த இந்திய அணிக்கும் பி பிரிவில் இரண்டாம் இடத்தை பிடித்த இங்கிலாந்து அணிக்கும் ஒரு அரையிறுதி போட்டி. ஏ பிரிவில் இரண்டாமிடத்தை பிடித்த ஆஸ்திரேலியா மற்றும் பி பிரிவில் முதலிடத்தை பிடித்த தென்னாப்பிரிக்காவுக்கும் இடையே மற்றொரு அரையிறுதி போட்டி. 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான அரையிறுதி போட்டி இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு தொடங்கியிருக்க வேண்டும். ஆனால்  சிட்னியில் மழை காரணமாக போட்டி தாமதமாகி கொண்டே இருந்தது. மழை நிற்காததால், டாஸ் கூட போடாமல் போட்டி கைவிடப்பட்டது. லீக் சுற்றில் அதிக வெற்றிகளுடன் அதிக புள்ளிகளை பெற்றிருந்த இந்திய அணி, இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்திய அணி முதல் முறையாக மகளிர் டி20 உலக கோப்பையின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. 

Also Read - இவங்க 2 பேருல ஒருவர் அடிச்சாலே எதிரணி காலி.. 2 பேரும் சேர்ந்து அடிச்சா..? இலங்கையின் நிலையை பாருங்க

மற்றொரு அரையிறுதி போட்டியும் அதே சிட்னியில் தான் நடக்க இருக்கிறது. மழை காரணமாக ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான அரையிறுதியும் நடக்குமா என்பது சந்தேகம் தான். அப்படி அந்த போட்டியும் ரத்தானால், புள்ளி அடிப்படையில் தென்னாப்பிரிக்கா தான் இறுதி போட்டிக்கு தகுதி பெறும்.

click me!