கேதர் ஜாதவே அடிக்கும்போது நான் அடிக்கலைனா அசிங்கம்.! ரோஷத்தோடு பெரிய சதமடித்து டெல்லியை வெற்றி பெற செய்த தவான்

By karthikeyan VFirst Published Feb 27, 2021, 8:12 PM IST
Highlights

விஜய் ஹசாரே தொடரில் தொடர்ச்சியாக சொதப்பிவந்த வந்த வந்த தவான், மகாராஷ்டிராவுக்கு எதிரான போட்டியில் பெரிய சதமடித்து டெல்லி அணியை வெற்றி பெற செய்தார்.
 

விஜய் ஹசாரே தொடரில் மகாராஷ்டிரா மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று நடந்தது. ஜெய்ப்பூரில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய மகாராஷ்டிரா அணி வீரர்கள் கேதர் ஜாதவும் ஆசிம் காஸியும் சிறப்பாக ஆடினர்.

சிறப்பாக ஆடிய கேதர் ஜாதவ் 81 பந்தில் 10 பவுண்டரிகளுடன் 86 ரன்கள் அடிக்க, காஸி 73 பந்தில் 10 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 91 ரன்களை குவித்தார் காஸி. அவர்களின் அதிரடி பேட்டிங் மற்றும் மற்ற வீரர்களின் சிறு சிறு பங்களிப்பால் 50 ஓவரில் 328 ரன்களை குவித்தது மகாராஷ்டிரா அணி.

329 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய டெல்லி அணியின் தொடக்க வீரரும் சீனியர் வீரருமான தவான், முந்தைய போட்டிகளில் சொதப்பிய நிலையில், இந்த போட்டியில் அபாரமாக ஆடி சதமடித்து 153 ரன்கள் அடித்து பெரிய இன்னிங்ஸ் ஆடி டெல்லி அணியை வெற்றி பெற செய்தார். தவானின் அதிரடி பேட்டிங்கே டெல்லிக்கு வெற்றியை உறுதி செய்துவிட்டது. 

தவான் 118 பந்தில் 21 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 153 ரன்களை குவிக்க, அவரது ஓபனிங் பார்ட்னர் த்ருவ் ஷோரே அரைசதம் அடித்து 61 ரன்கள் அடிக்க, அவர்களது அதிரடியான பேட்டிங்கால் கடைசி ஓவரில் இலக்கை எட்டி 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது டெல்லி அணி.
 

click me!