ENG vs IND:ஷர்துல் தாகூர் புளியங்கொம்பைத்தான் பிடிப்பார்!பெரிய விக்கெட்டை தூக்கி திருப்புமுனையை ஏற்படுத்தினார்

Published : Jul 03, 2022, 04:21 PM IST
ENG vs IND:ஷர்துல் தாகூர் புளியங்கொம்பைத்தான் பிடிப்பார்!பெரிய விக்கெட்டை தூக்கி திருப்புமுனையை ஏற்படுத்தினார்

சுருக்கம்

எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட்டில் இங்கிலாந்து அணியின் பேர்ஸ்டோ - ஸ்டோக்ஸ் பார்ட்னர்ஷிப்பை உடைத்தார் ஷர்துல் தாகூர்.  

இந்தியா - இங்கிலாந்து இடையேயான எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட்டில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 416 ரன்களை குவித்தது.

98 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணியை, ரிஷப் பண்ட்டும் ஜடேஜாவும் சேர்ந்து கரைசேர்த்தனர். இருவரும் இணைந்து அபாரமாக பேட்டிங் ஆடி 6வது விக்கெட்டுக்கு 222 ரன்களை குவித்தனர். சதமடித்த ரிஷப் பண்ட் 146 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஜடேஜாவும் சதமடித்து 104 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஸ்டூவர்ட் பிராடின் ஒரே ஓவரில் 29 ரன்களை அடித்த பும்ரா, 16 பந்தில் 31 ரன்களை விளாச, இந்திய அணி 416 ரன்களை குவித்தது.

2ம் நாள் ஆட்டத்தின் முதல் செசனிலேயே இந்திய அணி ஆல் அவுட்டாகிவிட்டது. ஆனால் மழை காரணமாக அதன்பின்னர் ஆட்டம் அவ்வப்போது தடைபட்டு தடைபட்டு நடந்தது. ஆனாலும் அதற்கிடையே இந்திய பவுலர்கள் அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினர். முதல் 3 விக்கெட்டுகளை பும்ராவும், சிராஜ் மற்றும் ஷமி ஆகிய இருவரும் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தியிருந்தனர்.

2ம் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 84 ரன்கள் அடித்திருந்தது இங்கிலாந்து அணி. 3ம் நாள் ஆட்டத்தை பேர்ஸ்டோவும் ஸ்டோக்ஸும் தொடர்ந்தனர். இந்திய அணியில் 6வது விக்கெட்டுக்கு ரிஷப் - ஜடேஜா பார்ட்னர்ஷிப் அமைத்ததுபோல், இங்கிலாந்து அணியில் 6வது விக்கெட்டுக்கு பேர்ஸ்டோ - ஸ்டோக்ஸ் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடி இந்திய அணியை அச்சுறுத்தினர்.

பேர்ஸ்டோ அரைசதம் அடித்தார். இந்த ஜோடியை பிரித்தாக வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி இருந்தநிலையில், எப்போதுமே முக்கியமான கட்டத்தில் எதிரணியின் பெரிய விக்கெட்டை வீழ்த்துவதை வாடிக்கையாக வைத்துள்ள ஷர்துல் தாகூர், இந்த போட்டியிலும் ஸ்டோக்ஸின் விக்கெட்டை வீழ்த்தி அதை செய்தார்.

ஸ்டோக்ஸை 25 ரன்களுக்கு வீழ்த்தி 6வது விக்கெட்டுக்கு 66 ரன்களை சேர்த்த பேர்ஸ்டோ -ஸ்டோக்ஸ் ஜோடியை பிரித்தார் ஷர்துல் தாகூர்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஹர்திக் மரண அடி.. பும்ரா மேஜிக் பவுலிங்.. SA-வை கதறவிட்ட இந்தியா.. T20 தொடரை வென்று அசத்தல்!
அபிஷேக் சர்மா சாதனையை சல்லி சல்லியாக நொறுக்கிய ஹர்திக் பாண்ட்யா..! மின்னல் வேக அரை சதம்!