டி20 உலக கோப்பையில் ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு மிகச்சரியான மாற்று வீரர் இவர்தான்..! ஷேன் வாட்சன் கருத்து

By karthikeyan VFirst Published Oct 3, 2022, 6:21 PM IST
Highlights

டி20 உலக கோப்பையில் ஆட இந்திய அணியில் ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு சரியான மாற்று  வீரர் யார் என்று ஆஸ்திரேலிய முன்னாள் ஜாம்பவான் ஷேன் வாட்சன் கருத்து கூறியுள்ளார்.
 

டி20 உலக கோப்பைக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தீவிரமாக தயாராகிவரும் நிலையில், இந்திய அணியின் முன்னணி ஃபாஸ்ட் பவுலர் ஜஸ்ப்ரித் பும்ரா காயம் காரணமாக டி20 உலக கோப்பையில் ஆடவில்லை.

காயத்திலிருந்து மீண்டு வந்து ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 தொடரில் ஆடிய பும்ரா, முதுகுப்பகுதியில் காயம் காரணமாக தென்னாப்பிரிக்க தொடர் மற்றும் டி20 உலக கோப்பையிலிருந்து விலகி பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் உள்ளார்.

இதையும் படிங்க  - தினேஷ் கார்த்திக் காட்டிய அக்கறை.. டீம் ஸ்கோர் தான் முக்கியம்.. நீ அடித்து ஆடு டிகேனு சொன்ன கோலி! வைரல் வீடியோ

பும்ரா காயத்திலிருந்து மீண்டுவர இன்னும் 6 மாதங்கள் ஆகும் என்பதால் அவர் டி20 உலக கோப்பையில் ஆட வாய்ப்பே இல்லை. தென்னாப்பிரிக்க தொடருக்கான பும்ராவிற்கு மாற்று வீரராக முகமது சிராஜ் எடுக்கப்பட்டுள்ளார். டி20 உலக கோப்பைக்கான மாற்று வீரர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

பவர்ப்ளே, டெத் ஓவர்கள், மிடில் ஓவர்கள் என ஆட்டத்தின் எந்த சூழலிலும் அபாரமாக பந்துவீசக்கூடியவர் பும்ரா. குறிப்பாக குறைவான ஸ்கோர் போட்டிகளில் டெத் ஓவர்களில் பெரிய வித்தியாசமாக இருப்பவர் பும்ரா தான். பும்ரா ஆடாதது தான் ஆசிய கோப்பையில் இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. 

பும்ராவின் இடத்தை மற்றொரு வீரர் நிரப்புவது என்பது மிகக்கடினம். பும்ராவிற்கு மாற்று வீரராக யார் எடுக்கப்படுவார்/எடுக்கப்பட வேண்டும் என்பது குறித்த விவாதம் நடந்துவருகிறது. முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து கூறிவருகின்றனர். டி20 உலக கோப்பைக்கான ரிசர்வ் வீரர்களாக எடுக்கப்பட்ட முகமது ஷமி மற்றும் தீபக் சாஹர் ஆகிய இருவரில் ஒருவர் பும்ராவிற்கு மாற்று வீரராக எடுக்கப்படலாம் என்று தெரிகிறது.

இதையும் படிங்க - சூர்யகுமார் விஷயத்துல ரிஸ்க் எடுக்க முடியாது.. இனிமேல் அவர் ஆடமாட்டார்..! கேப்டன் ரோஹித் சர்மா அதிரடி

இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள ஆஸ்திரேலிய முன்னாள் ஜாம்பவான் ஷேன் வாட்சன், ஜஸ்ப்ரித் பும்ரா டி20 உலக கோப்பையில் ஆடாதபட்சத்தில், என்னை பொறுத்தமட்டில் அவருக்கு சரியான மாற்று வீரர் முகமது சிராஜ் தான். பும்ராவிடம் இருக்கும் அதே ஃபயர்பவர் சிராஜிடமும் இருக்கிறது. ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் நல்ல வேகம் மற்றும் பவுன்ஸுக்கு ஒத்துழைப்பு கொடுக்கும். சிராஜ் புதிய பந்தில் அருமையாக வீசக்கூடியவர். நல்ல வேகமாகவும், அதேவேளையில் ஸ்விங் செய்தும் வீசக்கூடியவர்.  ரன்கள் கொடுக்காமல் வீசுவதுடன் விக்கெட்டும் வீழ்த்தவல்லவர் சிராஜ் என்று வாட்சன் தெரிவித்துள்ளார்.
 

click me!