தினேஷ் கார்த்திக் காட்டிய அக்கறை.. டீம் ஸ்கோர் தான் முக்கியம்.. நீ அடித்து ஆடு டிகேனு சொன்ன கோலி! வைரல் வீடியோ

By karthikeyan VFirst Published Oct 3, 2022, 3:57 PM IST
Highlights

விராட் கோலி அரைசதம் அடிக்க சிங்கிள் எடுத்து தருவதாக தினேஷ் கார்த்திக் கூற, அதெல்லாம் வேண்டாம்; அணியின் ஸ்கோர் தான் முக்கியம், நீங்கள் அடித்து ஆடுங்கள் என்கிற ரீதியில் விராட் கோலி மறுத்த வீடியோ வைரலாகிவருகிறது.
 

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்திய அணி, இந்திய மன்ணில் முதல் முறையாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை வென்று சாதனை படைத்தது.

கவுகாத்தியில் நடந்த 2வது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 237 ரன்களை குவித்தது. கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவரும் அரைசதம் அடித்தனர். ராகுல் 28 பந்தில் 57 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 22 பந்தில் 61 ரன்களும் குவித்தனர். ரோஹித் சர்மா 43 ரன்னில் ஆட்டமிழந்து அரைசதத்தை தவறவிட்டார். விராட் கோலி 49 ரன்களை குவித்து ஆட்டமிழக்கவில்லை. அவருக்கு அரைசதம் அடிக்கும் வாய்ப்பிருந்தும் அடிக்க முடியாமல் போனது.

இதையும் படிங்க - 

கடைசி ஓவர் முழுவதையும் தினேஷ் கார்த்திக் தான் எதிர்கொண்டார். கடைசி ஓவரின்போது தினேஷ் கார்த்திக், கோலி அரைசதம் அடிப்பதற்காக சிங்கிள் எடுத்து தருவதாக கூறினார். ஆனால் அதெல்லாம் வேண்டாம்; நீ அடித்து ஆடு என்பதாக செய்கை செய்து, தினேஷ் கார்த்திக்கின் அக்கறையை ஏற்க மறுத்தார் கோலி. இதையடுத்து அந்த ஓவரில் தினேஷ் கார்த்திக் 2 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரி அடித்து அபாரமாக முடித்து கொடுத்தார்.

இதையும் படிங்க - பும்ராவிற்கு நிகரான மாற்றுவீரர் இந்தியாவில் மட்டுமல்ல; உலகத்துலயே இல்ல! இந்திய அணிக்கு பேரிழப்பு- ஷேன் வாட்சன்

தினேஷ் கார்த்திக் சிங்கிள் எடுப்பதாக கூறியதை விராட் கோலி அணியின் நலன் கருதி ஏற்க மறுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

In addition to the run fest, a special moment as we sign off from Guwahati. ☺️ | | | pic.twitter.com/SwNGX57Qkc

— BCCI (@BCCI)

இந்த போட்டியில் இந்திய அணி 237 ரன்கள் அடித்திருந்தாலும் கூட, டேவிட் மில்லரின் அதிரடி சதத்தால் தென்னாப்பிரிக்க அணி இலக்கை நெருங்கியது. ஆனால் மிகக்கடினமானது என்பதால் தென்னாப்பிரிக்க அணி தோல்வியை தழுவியது. ஆனாலும் 221 ரன்களை குவித்து வெறும் 16 ரன்கள் வித்தியாசத்தில் தான் தோற்றது.
 

click me!