PAK vs ENG: பாகிஸ்தான் மண்ணில் டி20 தொடரை வென்றது இங்கிலாந்து

By karthikeyan VFirst Published Oct 3, 2022, 2:31 PM IST
Highlights

பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 4-3 என டி20 தொடரை வென்றது.
 

இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 7 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடியது. 6 போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா 3 வெற்றிகளை பெற்றதால் 3-3 என தொடர் சமனில் இருந்தது. தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி டி20 போட்டி லாகூரில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

பாகிஸ்தான் அணி:

பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), ஷான் மசூத், இஃப்டிகார் அகமது, குஷ்தில் ஷா, ஆசிஃப் அலி, ஷதாப் கான், முகமது நவாஸ், முகமது வாசிம், ஹாரிஸ்ராஃப், முகமது ஹஸ்னைன்.

இதையும் படிங்க - தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்திய ஒருநாள் அணி அறிவிப்பு! கேப்டன் தவான்.. 2 வீரர்களுக்கு அறிமுக வாய்ப்பு

இங்கிலாந்து அணி:

ஃபிலிப் சால்ட் (விக்கெட் கீப்பர்), அலெக்ஸ் ஹேல்ஸ், டேவிட் மலான், பென் டக்கெட், ஹாரி ப்ரூக், மொயின் அலி (கேப்டன்), சாம் கரன், டேவிட் வில்லி, கிறிஸ் வோக்ஸ், அடில் ரஷீத், ரீஸ் டாப்ளி.

முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஃபிலிப் சால்ட்(20), அலெக்ஸ் ஹேல்ஸ்(18) ஆகிய இருவரும் சோபிக்கவில்லை. டேவிட் மலான் அதிரடியாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். 4ம் வரிசையில் இறங்கிய பென் டக்கெட் அவருடன் இணைந்து நன்றாக ஆடி 19 பந்தில் 30 ரன்கள் அடித்தார். 

அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த டேவிட் மலான் 47 பந்தில் 78 ரன்களை குவித்தார். 5ம் வரிசையில் இறங்கிய ஹாரி ப்ரூக் 29 பந்தில் ஒரு பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்களுடன் 46 ரன்களை விளாச, 20 ஓவரில் 209 ரன்களை குவித்தது இங்கிலாந்து அணி.

இதையும் படிங்க - புவனேஷ்வர் குமாரை விட அவர் பன்மடங்கு சிறந்த பவுலர்..! T20 WC-ல் அவரை ஆடவைங்க.. டேனிஷ் கனேரியா அட்வைஸ்

210 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் ரிஸ்வான்(1) மற்றும் பாபர் அசாம் (4) ஆகிய இருவருமே ஒற்றை இலக்கத்தில் வெளியேற, ஷான் மசூத் மட்டும் அரைசதம்(56) அடித்தார். அதன்பின்னர் வழக்கம்போலவே மிடில் ஆர்டர் சொதப்ப, 20 ஓவரில் பாகிஸ்தான் அணி 142 ரன்கள் மட்டுமே அடித்து 67 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

இந்த போட்டியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி, 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 4-3 என தொடரை வென்றது.
 

click me!