சூர்யகுமார் விஷயத்துல ரிஸ்க் எடுக்க முடியாது.. இனிமேல் அவர் ஆடமாட்டார்..! கேப்டன் ரோஹித் சர்மா அதிரடி

சூர்யகுமார் யாதவ் அடுத்து டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தான் ஆடுவார். அதற்கிடையே எந்த போட்டியிலும் ஆடமாட்டார் என்று கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
 

india captain rohit sharma opines suryakumar yadav will not play anymore before india vs pakistan clash in t20 world cup

டி20 உலக கோப்பை நெருங்கும் நிலையில், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தீவிரமாக தயாராகிவருகிறது. ஜடேஜா, பும்ரா டி20 உலக கோப்பையில் ஆடாதது இந்திய அணிக்கு பின்னடைவாக அமையும் நிலையில், சூர்யகுமார் யாதவ், கேஎல் ராகுல், விராட் கோலி ஆகியோர் செம ஃபார்மில் இருப்பது இந்திய அணிக்கு பெரும் பலம்.

குறிப்பாக சூர்யகுமார் யாதவ் மிகச்சிறந்த ஃபார்மில், அபாரமான டச்சில் இருக்கிறார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடைசி டி20, தென்னாப்பிரிக்கவுக்கு எதிரான முதலிரண்டு போட்டிகள் என தொடர்ச்சியாக 3 அரைசதங்களை அடித்து மிரட்டியுள்ளார் சூர்யகுமார் யாதவ். ஆடும் போட்டிகளில் எல்லாம் அரைசதம் அடித்து அசத்துகிறார் சூர்யகுமார்.

Latest Videos

இதையும் படிங்க -  சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சூர்யகுமார் யாதவ் படைத்த 2 மாபெரும் சாதனைகள்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் அபாரமாக பேட்டிங் ஆடி 18 பந்தில் அரைசதம் அடித்த சூர்யகுமார் யாதவ், 22 பந்தில் 61 ரன்களை குவித்தார். இந்த போட்டியில், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 1000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார்.  573 பந்தில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 1000 ரன்களை அடித்ததன்மூலம், குறைந்த பந்தில் 1000 ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். மேலும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேக அரைசதம்(18 பந்தில் அரைசதம்) அடித்த 2வது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார்.

டி20 உலக கோப்பை நெருங்கும் நிலையில், இந்தியாவின் மிகப்பெரிய நம்பிக்கையாக திகழ்ந்துவருகிறார் சூர்யகுமார். 3ம் வரிசையில் கோலியும் நல்ல ஃபார்மில் ஆடுவதால், கோலி - சூர்யகுமார் யாதவின் பார்ட்னர்ஷிப்  டி20 உலக கோப்பையில் இந்திய அணிக்கு மிக முக்கியமானதாக இருக்கும்.

ஏற்கனவே பும்ரா, ஜடேஜா ஆகியோர் காயத்தால் டி20 உலக கோப்பையில் ஆடாதது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்த நிலையில், சூர்யகுமார் யாதவை பேணி காப்பது இந்திய அணிக்கு அவசியம். அந்தவகையில், இனிமேல் சூர்யகுமார் யாதவ் டி20 உலக கோப்பையில் அக்டோபர் 23ம் தேதி பாகிஸ்தானுக்கு எதிராகத்தான் ஆடுவார். அதற்கிடையே எந்த போட்டியிலும் ஆடமாட்டார் என்று கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துவிட்டார்.

இதையும் படிங்க - தினேஷ் கார்த்திக் காட்டிய அக்கறை.. டீம் ஸ்கோர் தான் முக்கியம்.. நீ அடித்து ஆடு டிகேனு சொன்ன கோலி! வைரல் வீடியோ

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்தூரில் நாளை நடக்கும் கடைசி டி20 மற்றும் டி20 உலக கோப்பையில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான பயிற்சி போட்டிகள் ஆகியவற்றில் சூர்யகுமார் யாதவ் ஆடமாட்டார் என்பதை உறுதியாக தெரிவித்துவிட்டார் ரோஹித் சர்மா. 
 

vuukle one pixel image
click me!
vuukle one pixel image