ஷேன் வாட்சனின் அதிரடி முடிவு.. ரசிகர்கள் அதிர்ச்சி

By karthikeyan VFirst Published Apr 26, 2019, 4:53 PM IST
Highlights

ஐபிஎல் உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் டி20 லீக் போட்டிகளில் ஷேன் வாட்சன் ஆடிவருகிறார். ஐபிஎல்லில் 2008ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆடினார். 2016-17 ஆகிய இரண்டு ஆண்டுகளும் ஆர்சிபி அணியில் ஆடினார். 2018ம் ஆண்டு வாட்சனை சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுத்தது. 
 
ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சன், ஆஸ்திரேலிய அணியில் நீண்டகாலம் ஆடியவர். 2002ல் ஒருநாள் அணியில் அறிமுகமான அவர், 2015ம் ஆண்டு ஓய்வு பெற்றார். 2015ல் ஆஸ்திரேலிய அணி உலக கோப்பையை வென்றபோது அந்த அணியில் ஆடினார்.

ஐபிஎல் உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் டி20 லீக் போட்டிகளில் ஷேன் வாட்சன் ஆடிவருகிறார். ஐபிஎல்லில் 2008ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆடினார். 2016-17 ஆகிய இரண்டு ஆண்டுகளும் ஆர்சிபி அணியில் ஆடினார். 2018ம் ஆண்டு வாட்சனை சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுத்தது. 

பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே சிறப்பான பங்களிப்பை கடந்த சீசனில் வாட்சன் வழங்கினார். சன்ரைசர்ஸுக்கு எதிரான இறுதி போட்டியில் சதமடித்து சிஎஸ்கே அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தார். இந்த சீசனிலும் சிறப்பாக ஆடிவருகிறார். 

ஆஸ்திரேலியாவில் நடக்கும் பிக்பேஷ் லீக் தொடரிலும் ஷேன் வாட்சன் ஆடிவந்தார். பிரிஸ்பேன் ஹீட், சிட்னி சிக்ஸர்ஸ், சிட்னி தண்டர்ஸ் ஆகிய அணிகளுக்காக வாட்சன் ஆடியுள்ளார். சிட்னி தண்டர்ஸ் அணிக்காக ஆடிவந்த வாட்சன், பிக்பேஷ் லீக் தொடரிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.

ஐபிஎல்லில் ஆடிவரும் வாட்சன், திடீரென பிக்பேஷ் லீக்கிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். அதனால் இந்த சீசனுடன் ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெற்றுவிடுவாரோ என்ற ஐயம் எழுந்துள்ளது. 37 வயதான வாட்சன், அருமையான ஆல்ரவுண்டர். சிஎஸ்கே அணியின் முக்கியமான வீரராக திகழ்கிறார். இந்நிலையில், அவர் ஐபிஎல்லிலும் ஓய்வு பெற்றுவிடுவாரோ என்ற ஐயம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 
 
click me!