சின்ன பையனா இருந்தாலும் கேப்டன்சில மிரட்டுறாரு.. சூப்பர் கேப்டன் அவரு!! இளம் கேப்டனை புகழ்ந்து தள்ளிய முன்னாள் சைனாமேன்

By karthikeyan VFirst Published Apr 26, 2019, 4:11 PM IST
Highlights

மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் ஆகிய இரு அணிகளும் கிட்டத்தட்ட பிளே ஆஃபிற்கு தகுதிபெறுவதை உறுதிசெய்துவிட்டன. இந்த சீசனில் முதன் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கிய டெல்லி கேபிடள்ஸ் அணி அபாரமாக ஆடிவருகிறது. 

ஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. சிஎஸ்கே அணி பிளே ஆஃப் இடத்தை உறுதி செய்துவிட்டது. 

மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் ஆகிய இரு அணிகளும் கிட்டத்தட்ட பிளே ஆஃபிற்கு தகுதிபெறுவதை உறுதிசெய்துவிட்டன. இந்த சீசனில் முதன் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கிய டெல்லி கேபிடள்ஸ் அணி அபாரமாக ஆடிவருகிறது. 

ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான அணியில் ரிஷப் பண்ட், பிரித்வி ஷா, ரபாடா என இளம் வீரர்களை உள்ளடக்கிய ஐபிஎல்லின் இளம் அணியாக டெல்லி அணி உள்ளது. இளம் வீரர்கள் அதிகமாக உள்ள அதேவேளையில், தவான், கிறிஸ் மோரிஸ், அமித் மிஷ்ரா ஆகிய அனுபவ வீரர்களும் உள்ளனர். அதுமட்டுமல்லாமல் தலைமை பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங்கும் ஆலோசகராக கங்குலியும் உள்ளனர்.

இந்த சீசனில் டெல்லி அணி அபாரமாக ஆடிவருகிறது. இதுவரை ஒருமுறை கூட இறுதி போட்டிக்கு முன்னேறாத ஒரே அணி டெல்லி அணிதான். எனவே இந்த சீசனில் கோப்பையை வெல்லும் தீவிரத்தில் உள்ளது. கடந்த சீசனின் பாதியில் டெல்லி அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற ஷ்ரேயாஸ் ஐயர், அந்த அணியை சிறப்பாக வழிநடத்தி செல்கிறார். 

இந்த சீசனில் இதுவரை 11 போட்டிகளில் ஆடி 7 வெற்றிகளுடன் 14 புள்ளிகளை பெற்று புள்ளி பட்டியலில் இரண்டாமிடத்தில் உள்ளது. இவ்வளவு விரைவில் டெல்லி அணி பிளே ஆஃப் உறுதி செய்ததே இதுதான் முதன்முறையாக இருக்கும். ஏனெனில் அந்த அணியின் வரலாறு அப்படி. 

ஷ்ரேயாஸ் ஐயர் ஒரு கேப்டனாக அணியை சிறப்பாக வழிநடத்துவதோடு பேட்டிங்கிலும் முன்னின்று வழிநடத்தி செல்கிறார். இந்நிலையில், ஷ்ரேயாஸ் ஐயர் குறித்து பேசிய ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சைனாமேன் பிராட் ஹாக், இந்த சீசனில் ஆடுவதுபோன்று இதுவரை எந்த சீசனிலும் டெல்லி அணி ஆடியதில்லை. இளம் வீரரான ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டன் பொறுப்பை ஏற்று ஒரு கேப்டனாக மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் முன்னின்று அணியை வழிநடத்துகிறார். களத்தில் இக்கட்டான சூழல்களில் சிறந்த முடிவுகளை எடுப்பதோடு பவுலர்களை சரியாக பயன்படுத்துகிறார் என்று ஷ்ரேயாஸ் ஐயரின் கேப்டன்சியை பிராட் ஹாக் பாராட்டியுள்ளார். 
 

click me!