நான் இங்கிலாந்து கேப்டனா இருந்தா இப்படித்தான் ஸ்மித்தை வீழ்த்துவேன்.. ஐடியா சொல்லும் முன்னாள் சுழல் ஜாம்பவான்

By karthikeyan VFirst Published Sep 15, 2019, 4:19 PM IST
Highlights

ஸ்மித்திற்கு ஆர்ச்சர் நெருக்கடி கொடுப்பார் என இங்கிலாந்து அணி நம்பிய நிலையில், அந்த வியூகம் பலனளிக்கவில்லை. ஸ்மித் ரன்னை குவிப்பதை இங்கிலாந்து அணியால் கட்டுப்படுத்தவும் முடியவில்லை, அவரை வீழ்த்தவும் முடியவில்லை. அவரது கவனக்குவிப்பு அபாரமாக உள்ளது. 

ஆஷஸ் தொடரில் அபாரமாக ஆடிவரும் ஸ்மித், ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றிகளை பெற்றுக்கொடுப்பதோடு, அவரும் தனிப்பட்ட முறையில் பல சாதனைகளை முறியடித்து புதிய மைல்கற்களை எட்டிவருகிறார். 

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தடையை அனுபவித்து மீண்டும் அணிக்கு திரும்பிய ஸ்மித்தின் பேட்டிங், தற்போது வேற லெவலில் உள்ளது. ஆஷஸ் தொடரில் மிகவும் அபாரமாக ஆடி ரன்களை குவித்துவருகிறார். 

முதல் டெஸ்ட்டின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம், இரண்டாவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் 92 ரன்கள், நான்காவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் இரட்டை சதம், இரண்டாவது இன்னிங்ஸில் 82 ரன்கள் மற்றும் நடந்துவரும் கடைசி டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் 80 ரன்கள் என ரன்களை குவித்துவருகிறார் ஸ்மித். 

ஆஷஸ் தொடரின் முதல் 4 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி வென்ற 2 போட்டிகளிலும் ஸ்மித் தான் ஆட்டநாயகன். ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்ற இரண்டு போட்டிகளிலும் இரு அணிகளுக்கும் இடையேயான பெரிய வித்தியாசமாக ஸ்மித் தான் திகழ்ந்தார். 

ஸ்மித்திற்கு ஆர்ச்சர் நெருக்கடி கொடுப்பார் என இங்கிலாந்து அணி நம்பிய நிலையில், அந்த வியூகம் பலனளிக்கவில்லை. ஸ்மித் ரன்னை குவிப்பதை இங்கிலாந்து அணியால் கட்டுப்படுத்தவும் முடியவில்லை, அவரை வீழ்த்தவும் முடியவில்லை. அவரது கவனக்குவிப்பு அபாரமாக உள்ளது. 

இந்நிலையில், ஏற்கனவே ஸ்மித்தை எப்படி வீழ்த்த முயற்சிக்கலாம் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்திருந்த நிலையில், தற்போது முன்னாள் சுழல் ஜாம்பவான் ஷேன் வார்ன் ஆலோசனை தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசியுள்ள ஷேன் வார்ன், எனக்கு தெரிந்தவரை, இந்தளவிற்கு எதிரணி மீது ஒரு பேட்ஸ்மேன் ஆதிக்கம் செலுத்தியது இல்லை. 751 ரன்கள்.. அடேங்கப்பா.. ஸ்மித்தை வீழ்த்துவதற்கான எந்த திட்டமும் இங்கிலாந்திடம் இல்லை. அவரை அவரது போக்கிலேயே விட்டுவிடுகிறது. ஸ்மித்துக்கு எதிரான எந்த திட்டத்தையும் இங்கிலாந்து அணி முழுமையாக செயல்படுத்துவதில்லை அல்லது திட்டத்தை இடைவிடாது தொடர்ச்சியாக செயல்படுத்துவதில்லை. ஒருவேளை அந்த அணி இந்த இரண்டையும் செய்தால், ஸ்மித் அபாரமாக ஆடி அவற்றையெல்லாம் தகர்த்துவிடுகிறார். ஆகமொத்தத்தில் ஸ்மித் பயங்கரமாக ஆதிக்கம் செலுத்துகிறார். 

ஸ்மித்துக்கு ஃபுல் லெந்த்தில் ரொம்ப வைடாக போடாமல், ஓரளவிற்கு வைடாக போட்டு அவரை கவர் திசையில் ஆடவைத்து வீழ்த்தலாம். அவரது உடம்பைவிட்டு தூரமாக வீசி அதை கவர் திசையில் அடிக்க வைக்க வேண்டும். லெக் ஸ்லிப்பில் ஃபீல்டிங் நிறுத்திவிட்டு அவ்வப்போது ஷார்ட் பந்துகளை போட வேண்டும் என்று ஷேன் வார்ன் தெரிவித்துள்ளார். 
 

click me!