ரோஹித்தால் தான் இந்திய அணி அசாத்திய சாதனையை படைக்கப்போகுது

By karthikeyan VFirst Published Sep 15, 2019, 4:06 PM IST
Highlights

வெஸ்ட் இண்டீஸ் தொடரிலேயே ராகுலை நீக்கிவிட்டு ரோஹித்தை தொடக்க வீரராக இறக்கலாம் என கங்குலி, அசாருதீன், கம்பீர் ஆகியோர் கருத்து தெரிவித்திருந்தார். ராகுல் தொடர்ச்சியாக சொதப்பிவரும் வேளையில், ரோஹித்துக்கு ஆதரவு பெருகியதால், ரோஹித்துக்கு தொடக்க வீரராக வாய்ப்பு கொடுத்தே தீர வேண்டிய கட்டாயத்திற்கு தேர்வுக்குழுவும் ஆளானது. அதன் விளைவாக, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ராகுல் நீக்கப்பட்டு ரோஹித் சர்மா தொடக்க வீரராக எடுக்கப்பட்டுள்ளார். 

இந்திய ஒருநாள் அணியில் மிடில் ஆர்டர் சிக்கல் இருந்துவந்த நிலையில், டெஸ்ட் அணியில் டாப் ஆர்டர் சிக்கல் உள்ளது. இந்திய டெஸ்ட் அணியின் தொடக்க வீரராக கடந்த சில ஆண்டுகளாக ஆடிவரும் கேஎல் ராகுல், அண்மைக்காலமாக சரியாக ஆடவில்லை. 

ஆஸ்திரேலிய தொடரில் சோபிக்காத ராகுல், வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் படுமோசமாக சொதப்பினார். ராகுல் சொதப்பினாலும் அவருக்கு நிறைய வாய்ப்புகள் வழங்கப்பட்டன. ஆனால் அதை பயன்படுத்தி கொள்ளாமல் தொடர்ச்சியாக சொதப்பிக்கொண்டே இருந்தார். 

வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் அனைத்து இன்னிங்ஸ்களிலும் ஆடினார். மொத்தமாக 4 இன்னிங்ஸ்களில் ஆடிய ராகுல், வெறும் 101 ரன்கள் மட்டுமே அடித்தார். அவரால் இந்திய அணிக்கு நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுக்க முடியவில்லை. அது அவருக்கு மட்டுமல்லாமல் அணிக்கும் பெரிய சிக்கலாகவும் பாதிப்பாகவும் அமைந்துவிட்டது. 

வெஸ்ட் இண்டீஸ் தொடரிலேயே ராகுலை நீக்கிவிட்டு ரோஹித்தை தொடக்க வீரராக இறக்கலாம் என கங்குலி, அசாருதீன், கம்பீர் ஆகியோர் கருத்து தெரிவித்திருந்தார். ராகுல் தொடர்ச்சியாக சொதப்பிவரும் வேளையில், ரோஹித்துக்கு ஆதரவு பெருகியதால், ரோஹித்துக்கு தொடக்க வீரராக வாய்ப்பு கொடுத்தே தீர வேண்டிய கட்டாயத்திற்கு தேர்வுக்குழுவும் ஆளானது. 

அதன் விளைவாக, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ராகுல் நீக்கப்பட்டு ரோஹித் சர்மா தொடக்க வீரராக எடுக்கப்பட்டுள்ளார். ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் தலைசிறந்த வீரராக வலம்வரும் ரோஹித் சர்மா, டெஸ்ட் அணியில் மட்டும் இடம் கிடைக்காமல் இருந்துவந்தார். எனவே அவர் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. அதுமட்டுமல்லாமல் அவரும் கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். 

இந்நிலையில், ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடக்க வீரராக இறங்குவது குறித்து பேசிய முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கார், இந்திய டெஸ்ட் அணியில் மிடில் ஆர்டர் செட்டில் ஆகிவிட்டது. தொடக்க ஜோடிதான் பிரச்னையாக உள்ளது. ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடக்க வீரராக இறங்குவதில் ஒரு பெரிய பலம் என்னவென்றால், ஆரம்பத்தில் ஃபீல்டிங்கில் நிறைய கேப்புகள்(இடைவெளிகள்) இருக்கும். அதை பயன்படுத்தி ரோஹித் நன்றாக ஆடுவார். அதுமட்டுமல்லாமல் அவர் மிடில் ஆர்டரில் இறங்கினால், அவருக்கான பேட்டிங் வாய்ப்பிற்காக காத்திருக்க வேண்டும். தனது பேட்டிங் வாய்ப்புக்காக காத்திருக்கும் ஆள் கிடையாது ரோஹித். எனவே தொடக்க வீரராக இறங்குவதால், அவரது மனவலிமையும் எனர்ஜியும் அதிகமாக இருக்கும் என்று பங்கார் தெரிவித்தார். 

ரோஹித் அவரது பேட்டிங் ஸ்டைலில் ஆடி டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜொலிக்கும் பட்சத்தில், அது இந்திய அணியை தூக்கி நிறுத்திவிடும். ரோஹித் சர்மா தொடக்க வீரராக சிறப்பாக ஆடி ஜொலித்தால், இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை விரட்டாத ஸ்கோரை எல்லாம் விரட்டி சாதனை படைக்கும் என்று சஞ்சய் பங்கார் தெரிவித்தார். 
 

click me!