#ENGvsIND 2வது இன்னிங்ஸையும் மனசுல வச்சு டீம் எடுங்கப்பா! மேட்ச் வின்னரை ஒதுக்கிட்டீங்களே.. ஷேன் வார்ன் அதிரடி

By karthikeyan VFirst Published Sep 4, 2021, 4:42 PM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி ரவிச்சந்திரன் அஷ்வினை புறக்கணிப்பது குறித்து ஆஸி., முன்னாள் சுழல் ஜாம்பவான் ஷேன் வார்ன் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
 

இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் 4 போட்டிகளில் அஷ்வின் ஆடவைக்கப்படவில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டில் அனைத்து நாடுகளிலும், எந்தவிதமான கண்டிஷனிலும் சிறப்பாக பந்துவீசி ஆட்டத்தின் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சீனியர் ஸ்பின்னர் அஷ்வின்.

ஸ்பின் பவுலிங் மட்டுமல்லாது, பேட்டிங்கும் நன்றாக ஆடக்கூடியவர். டெஸ்ட் கிரிக்கெட்டில் 413 விக்கெட்டுகள் வீழ்த்தியிருப்பதுடன், 5 சதங்களும் அடித்துள்ளார். 

நல்ல ஆல்ரவுண்டரான அஷ்வினை, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஒரு போட்டியில் கூட இந்திய அணியின் ஆடும் லெவனில் எடுக்கவில்லை. கண்டிஷனை காரணம் காட்டியே அஷ்வின் ஓரங்கட்டப்படுகிறார். ஆனால் பசுமையான ஆடுகளமாக இருந்தாலும், கடைசி 2 நாட்களில் சற்று வறண்டு ஸ்பின் பவுலிங்கிற்கு ஒத்துழைக்கும். அதனால் 2வது இன்னிங்ஸில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவர் அஷ்வின். 

அதுமட்டுமல்லாது இடது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக அருமையாக வீசக்கூடியவர் அஷ்வின். இங்கிலாந்து அணியில் இடது கை பேட்ஸ்மேன்கள் கணிசமாக இருக்கின்றனர். ஆனாலும் அஷ்வின் அணியில் எடுக்கப்படாமல் ஓரங்கட்டப்படுகிறார். 

4வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியிலும் அஷ்வின் எடுக்கப்படாத நிலையில், அதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஆஸி., முன்னாள் சுழல் ஜாம்பவான் ஷேன் வார்ன், இங்கிலாந்து அணி நல்ல பேலன்ஸான அணியாக உள்ளது. ஆனால் இந்திய அணி அப்படியில்லை. நான் கண்டிப்பாக அஷ்வினை அணியில் எடுப்பேன். ஓவலில் கண்டிப்பாக பந்து திரும்பும். அதுமட்டுமல்லாது, அஷ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 5 சதங்களை அடித்திருக்கிறார். எனவே ஒரு பேட்ஸ்மேனாகவும் சிறப்பாக செயல்படக்கூடிய, சிறந்த பவுலர் அஷ்வின்.

ஸ்பின்னர் ஆட்டத்தையே திருப்பவல்லவர். எந்தவிதமான கண்டிஷனாக இருந்தாலும், ஸ்பின்னரை எடுக்கலாம். அஷ்வினை எடுக்காதது வியப்பாக இருக்கிறது. முதல் இன்னிங்ஸை மட்டும் கருத்தில்கொண்டு அணியை தேர்வு செய்யக்கூடாது. ஸ்பின்னர்கள் போட்டியை வென்று கொடுக்கக்கூடியவர்கள் என்று ஷேன் வார்ன் கருத்து தெரிவித்தார்.
 

click me!