பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடி ரோகித் சர்மாவுக்கு வெளியே, உள்ளே போட்டு ஆட்டமிழக்கச் செய்துள்ளார்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் முகமது ஷமி, சூர்யகுமார் யாதவ் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. மாறாக, ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ் ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர்.
India vs Pakistan: விளையாட ஆரம்பித்த மழை: இந்தியா – பாகிஸ்தான் போட்டி மழையால் பாதிப்பு!
இந்தியா:
ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது சிராஜ்.
பாகிஸ்தான்:
ஃபஹர் ஜமான், இமாம் உல் ஹக், பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), அகா சல்மான், இப்திகார் அகமது, ஷதாப் கான், முகமது நவாஸ், ஷாஹீன் அஃப்ரிடி, நசீம் ஷா, ஹரீஷ் ராஃப்
டாஸ் வென்ற இந்திய அணியில் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் இந்திய அணி 4.2 ஓவர்களில் 15 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கீடு ஏற்பட்டது. சிறிது நேரத்திற்கு பிறகு போட்டி மீண்டும் தொடங்கப்பட்டது.
போட்டியில் 5ஆவது ஓவரை வீசிய ஷாஹீன் அஃப்டி 3, 4 மற்றும் 5ஆவது பந்தை வெளியில் போட்டுக் கொண்டே இருந்தார். இந்த நிலையில், தான் கடைசி பந்தை உள்ளே கொண்டு வந்து ரோகித் சர்மாவை கிளீன் போல்டாக்கி ஆட்டமிழக்கச் செய்துள்ளார். இதே போன்று போட்டியின் 6.3ஆவது ஓவரில் விராட் கோலியையும் ஆட்டமிழக்கச் செய்துள்ளார். தற்போது வரையில் இந்திய அணி 9.5 ஓவர்களில் 3 விக்கெட் இழந்து 48 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
India vs Pakistan: ஷர்துல் தாக்கூர், இஷான் கிஷானுக்கு வாய்ப்பு: டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்!