தோனியின் பெஸ்ட் கேப்டன் என்ற முகத்திரையை கிழித்து எறிந்த சேவாக்.. ரோஹித்தை புகழ்ந்து கோலியை காலி செய்த வீரு

By karthikeyan VFirst Published Feb 4, 2020, 4:01 PM IST
Highlights

ரிஷப் பண்ட் விவகாரத்தில் கேப்டன் கோலியை விமர்சிக்கும் கேப்பில், தோனியை கடுமையாக சாடியுள்ளார் சேவாக். 

தோனிக்கு பிறகு இந்திய அணியின் விக்கெட் கீப்பராக பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட், விக்கெட் கீப்பிங்கில் சொதப்பியதால், முதலில் டெஸ்ட் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டு ரிதிமான் சஹாவே மீண்டும் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக செயல்பட்டுவருகிறார். 

ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விக்கெட் கீப்பிங் செய்துவந்த ரிஷப் பண்ட், தொடர்ச்சியாக விமர்சனங்களுக்கு ஆளானார். ஆனாலும் அவர் தான் இந்திய அணியின் அடுத்த விக்கெட் கீப்பர் என்பதை உறுதி செய்த அணி நிர்வாகம், ரிஷப் பண்ட்டை மேட்ச் வின்னர் என்று புகழ்ந்ததோடு, அவருக்கு ஆதரவாக இருந்து தொடர் வாய்ப்புகள் வழங்கின. ஆனாலும் அந்த வாய்ப்புகளை ரிஷப் பண்ட் பயன்படுத்திக்கொள்ளவில்லை. 

இதற்கிடையே, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ரிஷப் பண்ட் பேட்டிங்கின்போது காயமடைய, இரண்டாவது இன்னிங்ஸில் ராகுல் கீப்பிங் செய்தார். அவர் சிறப்பாக விக்கெட் கீப்பிங் செய்ததையடுத்து அதன்பின்னர் தொடர்ச்சியாக அவரே விக்கெட் கீப்பராக செயல்பட்டுவருகிறார். ரிஷப் பண்ட் ஆடுவதற்கான முழு உடற்தகுதியை பெற்றிருந்தும் கூட அணியில் சேர்க்கப்படவில்லை.

ரிஷப் பண்ட்டுக்கு ஆதரவாக குரல் கொடுத்து, அவரை ஆஹா ஓஹோவென புகழ்ந்த அணி நிர்வாகம், தற்போது வாய்ப்பே கொடுக்காமல் பென்ச்சில் உட்காரவைத்திருக்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர், நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடர் ஆகியவற்றில் ரிஷப் பண்ட் ஆடவில்லை. அடுத்ததாக நியூசிலாந்துக்கு எதிராக நடக்கவுள்ள ஒருநாள் தொடரிலும் ரிஷப் பண்ட் ஆட வாய்ப்பில்லை. 

இந்நிலையில், ரிஷப் பண்ட்டை தொடர்ந்து ஓரங்கட்டும் அணி நிர்வாகத்தை சேவாக் கடுமையாக சாடியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள சேவாக், ரிஷப் பண்ட்டுக்கு கடந்த சில போட்டிகளில் ஏன் வாய்ப்பளிக்கவில்லை? அவரை மேட்ச் வின்னர் என்று நம்பினால், பிறகு எதற்கு கடந்த சில போட்டிகளில் வாய்ப்பளிக்காமல் பென்ச்சில் உட்கார வைத்திருக்கிறீர்கள். ஆட வாய்ப்பே கொடுக்கவில்லை என்றால், அவரால் எப்படி ஸ்கோர் செய்ய முடியும்? பென்ச்சில் உட்காரவைத்தால் சச்சின் டெண்டுல்கரால் கூட ஸ்கோர் செய்ய முடியாது.

நாங்கள் ஆடிய காலத்தில் கேப்டனாக இருந்த தோனி, இப்படித்தான் செயல்படுவார். வீரர்களுடன் கலந்து பேசவே மாட்டார். தற்போதைய கேப்டன் கோலி, அனைத்து வீரர்களுடனும் சகஜமாக பேசுகிறாரா, கலந்தாலோசிக்கிறாரா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் கடந்த ஆசிய கோப்பையின் போது, கேப்டனாக செயல்பட்ட ரோஹித் சர்மா, அனைத்து வீரர்களுடன் நன்றாக பேசி பழகினார் என்று பலர் தெரிவித்ததன் மூலமாகத் தெரிந்துகொண்டேன்.

Also Read - நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அந்த பையன் கண்டிப்பா ஆடுவான்.. உறுதி செய்த கோலி

கேப்டனாக இருப்பவர், அனைத்து வீரர்களுடனும் சகஜமாக பேசி பழகுவதுடன் கலந்தாலோசிக்கவும் வேண்டும். இந்திய அணியின் சிறந்த கேப்டன் என்று சொல்லப்படும் தோனி, பலமுறை வீரர்களுடன் கலந்து பேசாமல் தன்னிச்சையாக செயல்பட்டிருக்கிறார். ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின்போது, நான், சச்சின், கம்பீர் ஆகிய மூவரது ஃபீல்டிங்கும் ஸ்லோவாக இருக்கிறது என்று ஊடகங்களிடம் தெரிவித்தார். ஆனால் அதுகுறித்து எங்களிடம் அவர் பேசியதே இல்லை. எங்களிடம் அதை சொல்லவே செய்யாமல் நேரடியாக திடீரென ஊடகங்களிடம் சென்று தெரிவித்தார். அணி கூட்டத்தில் அனைத்து வீரர்களுடனும், கேப்டனாக இருப்பவர் கலந்தாலோசிக்க வேண்டும் என்று சேவாக் தெரிவித்துள்ளார். 
 

click me!