இந்திய அணியில் என்னை எடுக்கும் வரை ஓயவே மாட்டேன்.. சதங்களை சர்வ சாதாரணமா குவிக்கும் சர்ஃபராஸ்

By karthikeyan VFirst Published Feb 14, 2020, 2:26 PM IST
Highlights

மும்பை வீரர் சர்ஃபராஸ் கான் ரஞ்சி தொடரில் சதங்களை சர்வ சாதாரணமாக விளாசிவருகிறார். 
 

மும்பை அணி வீரர் சர்ஃபராஸ் கான், நடப்பு ரஞ்சி தொடரில் அபாரமாக ஆடி ஸ்கோர் செய்து வருகிறார். பெரிய இன்னிங்ஸ்களை அசால்ட்டாக ஆடுகிறார். உத்தரப் பிரதேச அணிக்கு எதிரான போட்டியில் முச்சதம் அடித்த சர்ஃபராஸ், இமாச்சல பிரதேச அணிக்கு எதிராக இரட்டை சதமடித்து அசத்தினார். 

இப்போது, மத்திய பிரதேச அணிக்கு எதிராக நடந்துவரும் போட்டியில் அபாரமாக ஆடி சதம் விளாசினார். இதிலும் கிட்டத்தட்ட இரட்டை சதத்தை நெருங்கிய சர்ஃபராஸ், 177 ரன்களில் ஆட்டமிழந்தார். இதுவும் பெரிய இன்னிங்ஸ்தான். இவ்வாறு முச்சதம், இரட்டை சதம், சதம் என தொடர்ச்சியாக மிகச்சிறப்பாக ஆடிவருகிறார். 

இந்த 177 ரன்கள் அடிக்க நிறைய பந்துகள் எல்லாம் எடுத்துக்கொள்ளவில்லை. 210 பந்தில் 24 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 177 ரன்களை விரைவில் குவித்தார். ஐபிஎல்லில் ஆர்சிபி அணியில் ஆடிவந்த சர்ஃபராஸ் கான், ஃபிட்னெஸ் இல்லை என்ற காரணத்திற்காக அந்த அணியிலிருந்து கழட்டிவிடப்பட்டார். இப்போது ஐபிஎல்லில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பில் ஆடுகிறார். 

ஆர்சிபி அணியிலிருந்து ஃபிட்னெஸ் இல்லை என்பதற்காக கழட்டிவிடப்பட்டதுதான், தனக்கு மிகப்பெரிய உத்வேகமாகவும் தூண்டுகோலாகவும் அமைந்ததாகவும் அதன்பின்னர் ஃபிட்னெஸில் கவனம் செலுத்தியதாகவும், அந்த அசிங்கம்தான் தன்னிடமிருந்து சிறப்பான பேட்டிங்கை வெளிக்கொண்டுவருவதாகவும் சர்ஃபராஸ் தெரிவித்திருந்தார். 

Also Read - ஐபிஎல்லுக்கு பிறகு டி20 உலக கோப்பை அணியில் இடம்பெற வாய்ப்புள்ள அதிரடி வீரர்

இதுவரை இந்திய அணியில் எடுக்கப்படாத சர்ஃபராஸ் கான், இந்திய அணியில் தேர்வு செய்ய தனது பெயரை கண்டிப்பாக பரிசீலித்தே தீர வேண்டிய சூழலை தற்போது உருவாக்கியுள்ளார். அவர் ஆடிய எல்லாமே வேகமான மற்றும் பெரிய இன்னிங்ஸ். ரஞ்சி தொடரில் தொடர்ச்சியாக அசத்திவரும் அவரை அவ்வளவு எளிதாக இனிமேல் தேர்வுக்குழுவாலும் அணி நிர்வாகத்தாலும் புறக்கணிக்க முடியாது. அப்படியான சூழலை உருவாக்கியுள்ளார் சர்ஃபராஸ். 
 

click me!