உள்நாட்டு போட்டிகளில் அபாரமாக ஆடிய அந்த 3 பேரையும் ஏன் இந்திய அணியில் எடுக்கல..? முன்னாள் வீரர் ஆதங்கம்

By karthikeyan VFirst Published May 17, 2021, 9:22 PM IST
Highlights

உள்நாட்டு போட்டிகளில் சிறப்பாக ஆடிவரும் 3 வீரர்களை, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் புறக்கணிக்கப்பட்டதை முன்னாள் வீரரும் முன்னாள் தேர்வாளருமான சரண்தீப் சிங் தெரிவித்துள்ளார்.
 

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் ஆகியவற்றிற்கான 20 வீரர்களை கொண்ட இந்திய அணி அண்மையில் அறிவிக்கப்பட்டது. 

இந்திய அணி:

விராட் கோலி(கேப்டன்), ரஹானே(துணை கேப்டன்), ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், மயன்க் அகர்வால், புஜாரா, ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), அஷ்வின், ஜடேஜா, அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர், பும்ரா, இஷாந்த் சர்மா, ஷமி, சிராஜ், ஷர்துல் தாகூர், உமேஷ் யாதவ்.

கேஎல் ராகுல், ரிதிமான் சஹா.(உடற்தகுதி கண்காணிக்கப்படுகிறது)

ஸ்டாண்ட்பை வீரர்கள் - அபிமன்யூ ஈஸ்வரன், ஆவேஷ் கான், பிரசித் கிருஷ்ணா, அர்ஸான் நாக்வஸ்வாலா

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் உள்நாட்டு போட்டிகளில் சிறப்பாக ஆடிவரும் சில வீரர்களை புறக்கணித்தது குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார் முன்னாள் வீரர் சரண் தீப் சிங்.

பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் இதுகுறித்து பேசிய சரண்தீப் சிங், பிரியங்க் பன்சால் நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா ஏ அணிக்காக ஆடி சதமடித்திருக்கிறார். ஏகப்பட்ட ரன்களை குவித்துவரும் தேவ்தத் படிக்கல்லையும் சேர்க்கவில்லை. இடது கை ஃபாஸ்ட் பவுலருக்கான ஸ்லாட்டில் ஜெய்தேவ் உனாத்கத்தை எடுக்காததை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. கடந்த ரஞ்சி தொடரில் 67 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். அவரையும் எடுக்கவில்லை என்று அணி தேர்வு குறித்த தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார் சரண் தீப் சிங்.
 

click me!